Sun ,Apr 02, 2023

சென்செக்ஸ் 57,794.75
181.03sensex(0.31%)
நிஃப்டி17,012.25
60.55sensex(0.36%)
USD
81.57
Exclusive

முன்னால் சென்ற வாகனத்தை முந்த முயன்றதால் விபத்து; பெண் தலை நசுங்கி பலி! 

KANIMOZHI Updated:
முன்னால் சென்ற வாகனத்தை முந்த முயன்றதால் விபத்து; பெண் தலை நசுங்கி பலி! Representative Image.

கள்ளக்குறிச்சி அருகே முன்னால் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்ற போது இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த பெண் தலை நசுங்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. 

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அடுத்த புதுமாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் மணிமேகலை இவரும் புக்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஒருவரும் கள்ளக்குறிச்சியில் கட்டிட வேலைகளை முடித்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பியுள்ளனர்.

 

கள்ளக்குறிச்சி துருகம் சாலையில் உள்ள மின்மயானம் அருகே முன்னால் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்ற போது நிலைத்தடுமாறி இருசக்கர வாகனத்தில் இருந்து மணிமேகலை தவறி விழுந்த நிலையில் பின்னால் வந்த வாகனம் மணிமேகலை மீது மோதி விபத்துக்குள்ளானதில் மணிமேகலை சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

 

இது குறித்து தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த மணிமேகலையின் பிரேதத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் விபத்தில் படுகாயம் அடைந்த புக்குளம் கிராமத்தைச் சேர்ந்த வாலிபரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.இந்த விபத்து குறித்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்


 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்