Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

திடீரென ஏற்பட்ட மாரடைப்பு.! பிரபல நடிகர் மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி..!

Gowthami Subramani Updated:
திடீரென ஏற்பட்ட மாரடைப்பு.! பிரபல நடிகர் மரணம்..  திரையுலகினர் அதிர்ச்சி..!Representative Image.

தமிழ் திரையுலகில் பிரபல காமெடியனாக எல்லோராலும் அறியப்பட்டவரான நடிகர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். தென்னிந்திய திரையுலகில், பிரபல தமிழ் நடிகரான மயில்சாமி உடல்நலக் குறைவால் இன்று காலமானார். இவருக்கு வயது 57. இவர், சென்னையில் விருப்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தனர். அப்போது காரில் சென்று கொண்டிருந்த சமயத்தில் உடல்நிலை மிகவும் மோசமடைந்து பாதிக்கப்பட்டார்.

திடீரென ஏற்பட்ட மாரடைப்பு.! பிரபல நடிகர் மரணம்..  திரையுலகினர் அதிர்ச்சி..!Representative Image

இந்நிலையில், மருத்துவமனையில் அவரைப் பரிசோதித்த போது, மயில்சாமி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதனால் குடும்பமே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியது. நடிகர் மயில்சாமி அவர்களின் திடீர் மறைவு தமிழ் திரையுலகத்தை சேர்ந்தவர்களை சோகத்தில் தள்ளியுள்ளது. மேலும், இது பொது மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்