Thu ,Dec 07, 2023

சென்செக்ஸ் 69,653.73
357.59sensex(0.52%)
நிஃப்டி20,937.70
82.60sensex(0.40%)
USD
81.57
Exclusive

‘உதயநிதி கிட்ட அது இருக்கு’... வாரிசு அரசியலுக்கு பார்த்திபன் கொடுத்த பளீச் பதிலடி! 

Kanimozhi Updated:
‘உதயநிதி கிட்ட அது இருக்கு’... வாரிசு அரசியலுக்கு பார்த்திபன் கொடுத்த பளீச் பதிலடி! Representative Image.

கலைஞர் கருணாநிதியிடம் இருந்த திறமையின் ஒரு பகுதி உதயநிதி ஸ்டாலினிடமும் இருப்பதாகவும், அதனால் அவரை வாரிசு என்ற காரணத்திற்காக ஒதுக்க முடியாது என்றும் நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார். 

சென்னையில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்ற நடிகர் பார்த்திபன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தீபாவளி, பொங்கல் பண்டிகையை விட திரைப்பட விழாதான் எனக்கான திருவிழா. எனது ஆரம்பமே இங்கிருந்து தொடங்கியதுதான். இதுவரை மூன்று தேசிய விருது வாங்கிவிட்டேன். ஆனாலும் எனது ஆசை அடங்கவில்லை. இரவின் நிழல் பட்டத்திற்கு இதுவரை 114 சர்வதேச விருதுகள் கிடைத்துள்ளது. தற்போது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் என்னுடைய இரவின் நிழல் திரையிடுவது மிகவும் பெருமையான விஷயம் என்றார். 

உதயநிதியை வாரிசு என்ற காரணத்திற்காக மட்டுமே ஒதுக்கக் கூடாது. அவரிடம் அவரது தாத்தாவிடம் உள்ள திறமை ஒரு பகுதி அவரிடம் உள்ளது. உயர்ந்த பதவிக்கு செல்லும்போது ஒரு முடிவு எடுத்துத்தான் ஆக வேண்டும். பெண் சக்தி எவ்வளவு சக்திவாய்ந்தது என்பது குறித்து ஒரு படம் எடுக்க உள்ளேன் எனத் தெரிவித்தார். பணிகள் நடைபெற்று வருகிறது. 

என் இரவின் நிழல் படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் தான் தமிழகம் முழுவதும் வெளியிட்டது. மிகச் சரியான கணக்கு வந்தது. திரையரங்குகளில் இருந்து வரவேண்டிய பணம் உடனே கிடைக்கிறது. உதயநிதி அதிகாரத்திற்கு வந்தபிறகு நல்ல காரியம் நடந்துள்ளது. உதயநிதிக்கு வாய்ப்பு கொடுத்து ஊக்குவித்தால் தமிழகத்தில் நிச்சயம் ஒரு சிறந்த அமைச்சராக வருவார் எனத் தெரிவித்தார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்