Mon ,Dec 11, 2023

சென்செக்ஸ் 70,028.54
202.94sensex(0.29%)
நிஃப்டி21,019.00
49.60sensex(0.24%)
USD
81.57
Exclusive

கூடுதல் பேருந்துகள் இயக்க திட்டம்....அமைச்சர் சிவசங்கர் தகவல்..!

madhankumar June 12, 2022 & 14:17 [IST]
கூடுதல் பேருந்துகள் இயக்க திட்டம்....அமைச்சர் சிவசங்கர் தகவல்..!Representative Image.

கோடை விடுமுறை முடித்து பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட உள்ளதால், தமிழகத்தில் சென்னை மற்றும் பிறபகுதிகளில் 1,450 கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் கூறியுள்ளார்.

அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் சார்பாக நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ளும் நபர்களுக்காக 20 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவை திருவிழா, தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் கூடுதலாக இயக்கப்படும். இந்நிலையில் அதே போல் நாளை பள்ளி காலுறைகள் திறக்கப்படுவதால் பொதுமக்கள் வசதிக்காக கூடுதல் பேருந்துகள் இயக்க போக்குவரத்துக் கழகம்  திட்டமிட்டுள்ளது.   கடந்த மாதம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், பலர் குடும்பத்துடன் சுற்றுலா தளங்களுக்கு படையெடுத்துவிட்டனர்.

இந்நிலையில் கோடை விடுமுறை முடிந்துவிட்டதால் அவர்கள் சொந்த ஊருக்கு திரும்புகின்றனர். இதனால் பேருந்துகளில் கூட நெரிசலை தவிர்க்கவும் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் இருக்க கூடுதலாக 1,450 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்