கடந்த ஜூன் 23 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் ஒற்றை தலைமை பிரச்னை மிகப்பெரிய அளவில் எழுந்ததையயடுத்து பொதுக்குழுவில் நிறைவேற்றவிருந்த எந்த தீர்மானமும் நிறைவேற்றாடாமல் நிராகரிக்கப்பட்டது.
மேலும் அதிமுகவை எடப்பாடி பழனிசாமிதான் தலைமையேற்று நடத்தவேண்டும் என பெரும்பாலான தொண்டர்கள் முழக்கமிட்டனர். இதனையடுத்து ஓ.பன்னிர்செல்வம் கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினார். அதிமுகவின் பொதுக்குழு ஜூலை 11ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் அழைப்பிதழ் சென்று சேர்ந்துள்ளது. சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டத்தில் பொதுக்குழுவை நடத்த ஏற்பாடுகள் தயாராகி வருகின்றன.
இந்நிலையில் தமிழகத்தில் கடந்து சில நாட்களாக கொரோனா பரவல் படிப்படியாக அதிகரித்துவரும் நிலையில் ஆன்லைன் மூலமும் பொதுக்குழுவை நடத்த மாற்ற திட்டத்தையும் தலைமைக் கழக நிர்வாகிகள் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பொதுக்குழு உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் நேரடியாக நடத்தவே திட்டமிட்டுள்ள நிலையில், கொரோனாவை காரணம் காட்டி அரசு அனுமதி வழங்காதபட்சத்தில் இந்த மாற்று திட்டத்தை பயன்படுத்தவும் தலைமை கழக நிர்வாகிகள் முடிவெடுத்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…