Sun ,Dec 04, 2022

சென்செக்ஸ் 62,868.50
-415.69(-0.66%)
நிஃப்டி18,696.10
-116.40(-0.62%)
USD
81.57
Exclusive

நோ ராக்கிங்: கல்லூரிகளில் ராக்கிங்கை தடுக்க டிஜிபி சைலேந்திர பாபு அதிரடி உத்தரவு...

Nandhinipriya Ganeshan November 16, 2022 & 09:48 [IST]
நோ ராக்கிங்: கல்லூரிகளில் ராக்கிங்கை தடுக்க டிஜிபி சைலேந்திர பாபு அதிரடி உத்தரவு... Representative Image.

வேலூர் கிறிஸ்தவ மருத்துவ கல்லூரியில் ஜூனியர் ஸ்டூடென்ஸை சீனியர் ஸ்டூடென்ஸ் ராக்கிங் செய்தனர். அரைநிர்வாணமாக மாணவர்கள் கல்லூரியை வலம் வந்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விசாரணை நடத்திய கல்லூரி நிர்வாகம் 7 மாணவர்களை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. தமிழகத்தில் ராக்கிங் கொடுமையே இல்லாத நிலையில், இந்த சம்பவம் நடந்துள்ளதால், அனைத்து கல்லூரிகளும் ராக்கிங் கொடுமையை தடுப்பதற்கான முன்னேற்பாடுகளை செய்துள்ளனர். அதன்படி, தமிழக டிஜிபி சைலேந்திர பாபு அனைத்து மாநில போலீஸ் கமிஷனர்கள், எஸ்பிகளுக்கு சுற்றறிக்கை மூலம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். 

துண்டு துண்டாக வெட்டப்பட்ட பொன் நாவரசு.. இந்தியாவை உலுக்கிய கொடூர சம்பவமும் பின்னணியும்..

நோ ராக்கிங்: கல்லூரிகளில் ராக்கிங்கை தடுக்க டிஜிபி சைலேந்திர பாபு அதிரடி உத்தரவு... Representative Image

11 முக்கிய பாயிண்ட்டுகள்:

1. ராக்கிங் சம்பவம் தொடர்பான புகார்கள் மீது சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தால் எடுக்கப்படும் நடவடிக்கைகளில் திருப்தியடையாத பெற்றோர் அளிக்கும் புகார் மீது உடனடியாக காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2. ஒவ்வொரு கல்லூரி ஹாஸ்ட்டலிலும் அல்லது அதன் அருகாமையிலும் முழுநேர விடுதி கண்காணிப்பாளர் தங்கி இருக்க வேண்டும் என்பதை கல்வி நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்.

3. கல்வி நிறுவனங்களில் ராக்கிங் எதிர்ப்பு நடவடிக்கைகளை ஒழுங்குப்படுத்தும் நோக்கில் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

4. அதன்படி, மாணவர்கள் இடையே ராக்கிங் எதிர்ப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும்.

5. இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்க மாவட்ட ராக்கிங் எதிர்ப்பு குழுக்களும் செயல்படுத்தப்பட வேண்டும். 

6. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள், கல்வி நிறுவனங்களின் நிர்வாகம் மற்றும் ஆசிரியர்களை ஒருங்கிணைத்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நோ ராக்கிங்: கல்லூரிகளில் ராக்கிங்கை தடுக்க டிஜிபி சைலேந்திர பாபு அதிரடி உத்தரவு... Representative Image

7. விழிப்புணர்வு ஏற்படுத்தும்போது அதிகார எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்கள் மற்றும் காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகளின் தொலைபேசி எண்கள், கல்வி நிறுவனங்களின் நிறுவனத்தினருக்கும், மாணவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.

8. அறிவிப்பு பலகைகளிலும் தொலைபேசி, மொபைல், வாட்ஸ்அப் எண்கள் குறிப்பிடப்பட வேண்டும்.

9. கல்வி வளாகத்தின் முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்

10. பெறப்பட்ட புகார்களை மன்னுரிமை அடிப்படையில் விசாரிக்கப்பட வேண்டும்.

11. பதிவு செய்யப்பட்ட வழக்குகள் விரைவில் முடிக்கப்பட வேண்டும். சட்ட கருத்துகள் பெறுவதில் தாமதம் கூடாது. 

Also Read: டிரைவருக்கு வந்த மாரடைப்பால் ஏற்பட்ட உயிரிழப்பு..!

Tag: No Ragging | DGP Issues Anti-ragging Guidelines To Institutions | Dgp Sylendra Babu | Anti-ragging Guidelines To Institutions | டிஜிபி சைலேந்திர பாபு .


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்