2023 ஆம் ஆண்டிற்கான அக்னி நட்சத்திரம் தொடங்கும் மற்றும் முடிவடையும் நேரம் குறித்த விவரங்களை இதில் காணலாம்.
சித்திரை மாதம் தொடக்கம் முதலே வெயிலின் தாக்கம் அதிகமாகவே காணப்படும். அதிலும், அக்னி நட்சத்திர காலத்தில் வெயிலின் தாக்கம் மிக அதிக அளவில் காணப்படுவதால், இந்த கால கட்டத்தில் மக்கள் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கப்படுவர். அறிவியல் ரீதியாக இந்த அக்னி நட்சத்திரம் தோன்றினாலும், ஆன்மீக ரீதியாக இதற்கு ஒரு புராண கதையே உள்ளது.
அக்னி நட்சத்திரம் என்பது, வெப்பத்தைக் குறிக்கிறது. இது சித்திரை வெயில், கத்தரி வெயில், கோடை வெயில் போன்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது. அக்னி நட்சத்திர காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாகக் காணப்படும். சூரியன் ஒரு கோளாக இருப்பினும், அது ஒரு விண்மீன் தானே. இதனால், அக்னி நட்சத்திர காலத்தில் சந்திரன் மட்டுமல்லாமல் பூமியும் சூரியனுக்கு அருகில் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இதன் காரணமாகவே, பூமி அதிக வெப்பத்தைத் தாங்குகிறது. தமிழ் மாதங்களின் அடிப்படையில் சூரியனின் பயணங்கள் அமையும். அதாவது அக்னி நட்சத்திர காலத்தில் முதல் மற்றும் கடைசி 7 நாள்களில் வெயிலின் தாக்கம் சுமாராகவும், இடையில் உள்ள 7 நாள்களில் வெப்பம் அதிகமாகவும் காணப்படும்.
இந்த 2023 ஆம் ஆண்டின் அக்னி நட்சத்திர காலமானது, இந்த சித்திரை மாதம் 21 ஆம் தேதி தொடங்கி, வைகாசி மாதம் 14 ஆம் தேதி வரை மொத்தம் 21 நாள்கள் அக்னி நட்சத்திர காலம் எனப்படுகிறது. ஆங்கில மாதத்தின் படி, மே 4 ஆம் தேதி தொடங்கி, மே மாதம் 29 ஆம் நாள் முடிவடைகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…