Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,563.59
567.28sensex(0.78%)
நிஃப்டி22,313.45
189.80sensex(0.86%)
USD
81.57
Exclusive

பங்குச்சந்தையில் குழப்பத்தை உருவாக்கிய AI-யின் பென்டகன்..! வைரலாகும் போலி படங்கள்..

Gowthami Subramani Updated:
பங்குச்சந்தையில் குழப்பத்தை உருவாக்கிய AI-யின் பென்டகன்..! வைரலாகும் போலி படங்கள்..Representative Image.

நவீன தொழில்நுட்பத்தின் வளர்ச்சியாக விளங்குவது AI என்ற ஆர்ட்டிஃபிசியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பம் ஆகும். இதன் ஒவ்வொரு நடவடிக்கையும், தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதன் ஒரு பகுதியானது, AI, எதிர்காலத்தில் ஒருவர் எப்படி இருப்பார் என்பதற்கு புகைப்படத்தை வெளியிட்டு, அது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. ஆனால், தற்போது பென்டகன் வெடித்ததைக் காட்டும் போல புகைப்படம் ஒன்று AI ஆல் உருவாக்கப்ப்பட்டு அது சமூக ஊடகங்களில் வைரலாகியது. இந்த வெடிப்பின் போலிப் புகைப்படம் செய்தித் தளங்களால், குழப்பங்களைத் தூண்டி, உண்மை என புகார் அளிக்கபப்ட்டது.

மேலும், இந்த செய்தி வெளியான சில நிமிடங்களில் S&P 500 30 புள்ளிகள் வீழ்ச்சியடைந்துள்ளது. எனவே, இது பங்குச் சந்தைகளைப் பாதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பென்டகன் அமெரிக்காவின் முக்கிய ராணுவத்தளம் ஆகும். இதனைத் தொடர்ந்து, ஆர்லிங்டன் காவல் துறை ட்வீட் ஒன்றை வெளியிட்டு, இவை போலியானவை என உறுதிப்படுத்தியது. மேலும், பென்டகன் இட ஒதுக்கீடு அல்லது அதற்கு அருகில், இது போல எந்த வெடிப்பு நிகழ்வும் நடைபெறவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த புகைப்படம் வைரலானதைத் தொடர்ந்து, இது செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டதாகக் கூட இருக்கலாம் என கூறியுள்ளனர். ஆனால், இந்த குழப்பங்கள் நிலவியதால், பென்டகன் இத்தகைய வெடிப்பு எதுவும் நடக்கவில்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்