அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் ஜூன் 23ஆம் தேதி நடைபெறும் என அறிவுப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில், பொதுக்குழு கூட்டம் தொடர்பாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில் நாளை மறுநாள் ஆலோசனை நடைபெறுகிறது.
இது தொடர்பாக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி சேர்ந்து அறிக்கை வெளியிட்டுள்ளனர் .
இந்த அறிக்கையில், “நாளை மறுநாள் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. மேலும், இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த ஆலோசனை கூட்டத்தில், பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட வேண்டிய முக்கிய முடிவுகள், தீர்மானங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படும் என கூறப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…