ஏர்டெல் வாடிக்கையாளர் ஒருவர் ஜியோ மற்றும் ஏர்டெல் சேவையை பயன்படுத்தி அழைப்புகள் எதையும் பேசவே முடியவில்லை, நெட்வொர்க் மிகவும் மோசமாக இருக்கிறது என ட்விட்டரில் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த ஏர்டெல் கேர்ஸ் ஏர்டெல் உங்களது சேவையை மேம்படுத்த ஏர்டெல்லுக்கு மாறுங்க, சேவையை மாற்ற எங்களை தொடர்பு கொள்ளுங்கள் என கூறியிருந்தது.
இதனை கோட் ட்வீட் செய்த மற்றொரு நபர் "அட வாப்பா சோணையா" என கூறியிருந்தார். அதற்கு நச்சென அதே காட்சியில் வரும் வசனமான "என்ன ராமலிங்கம் ஆளையே பாக்க முடியல எப்படி இருக்க" என பதிலளித்துள்ளது. தற்போது இந்த பதிவு வைரலாகி வருகிறது.
மேலும் இந்த பதிவிற்கு நெட்டிசன்கள் பலர் இதுக்கு மட்டும் பதில் கொடுங்க ஏதாச்சும் பிரச்சனைன்னு கம்ளைண்ட் கொடுத்த பதில் வருவதே இல்ல என கமெண்டில் பதிவிட்டு வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…