Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

இதை செய்ய இவர்களுக்கும் உரிமை உண்டு...உச்சநீதிமன்ற தீர்ப்பால் பரபரப்பு!

Priyanka Hochumin September 29, 2022 & 12:35 [IST]
இதை செய்ய இவர்களுக்கும் உரிமை உண்டு...உச்சநீதிமன்ற தீர்ப்பால் பரபரப்பு!Representative Image.

திருமணம் ஆகாத பெண்களுக்கும் கருக்கலைப்பு செய்ய உரிமை உள்ளது என்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வெளியிட்டதால் ஒரே பரபரப்பு.

எதற்காக இந்த தீர்ப்பு என்றால், யார்? எந்த சூழலில்? கருக்கலைப்பு செய்ய வேண்டும் என்னும் விதிமுறையை ஒழுங்கு படுத்தும் வழக்கு, இன்று டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதில் பாதுகாப்பாக மற்றும் சட்டபூர்வமாக கருக்கலைப்பு செய்ய அனைத்து பெண்களுக்கும் உரிமை உள்ளது. மேலும் திருமணம் ஆகாத பெண்களும் 20 முதல் 24 வார கர்ப்பத்தை கலைக்க உரிமை உண்டு எனவும் தீர்ப்பு வழங்கினர். கருக்கலைப்பு விதிகளில் திருமணமாகாத பெண்களை அனுமதிக்க மறுப்பது அரசியலமைப்புக்கு எதிரானது என நீதிபதி கூறியுள்ளார்.

அதிலும் கூடுதலாக திருமணத்திற்கு பிறகு மனைவியின் அனுமதியின்றி, கணவன்மார்களால் ஏற்படும் பாலியல் வன்கொடுமையும் இந்திய அரசியலமைப்பு சட்டம் மற்றும் கருக்கலைப்புக்கான விதிகளின் கீழ் ( marital rape) என்று எடுத்துக் கொள்ள வேண்டும் என உச்சநீதிமன்ற வழங்கிய தீர்ப்பு பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் திருமணம் ஆன மற்றும் ஆகாத பெண்களுக்கும் உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்