ஆன்லைன் சூதாட்டத்தின் காரணமாக மீண்டுமொரு உயிரிழப்பு நேர்ந்தால், அதற்கு ஆளுநர் தான் பொறுப்பேற்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
இது குறித்து பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்ததாவது, “ஆன்லைன் சூதாட்டத்திற்கு முந்தைய ஆட்சியில் விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது. இதனால், இந்த ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த நபர்களின் எண்ணிக்கை 29 ஆக உள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளில் 80-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்” என்று கூறியுள்ளார்.
இது குறித்து, அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டதாவது, “திருச்சியில் உள்ள மலையாண்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்ற பொறியியல் மாணவர், ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் வேதனையளிக்கிறது. மாணவனின் குடும்பத்திற்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.
இந்த ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிரான பா.ம.கவின் தொடர் போராட்டத்தின் காரணமாக, தமிழக அமைச்சரவை கடந்த மாதம் 26 ஆம் நாள் ஆன்லைன் சூதாட்ட தடை அவசரச் சட்டத்திற்காக ஒப்புதல் கோரப்பட்டது. இந்த அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்திருந்தால், இது போன்ற தற்கொலையைத் தடுக்க முடியும்.
மேலும், ஆன்லைன் சூதாட்டத்திற்கு இன்னொருவர் உயிரிழக்கும் பட்சத்தில் அதை ஆளுநர் தான் பொறுப்பேற்க வேண்டும் என ஒரு வாரத்திற்கு முன்பே கூறியிருந்ததாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். ஆளுநர் மாளிகை இந்த ஆன்லைன் சூதாட்டத் தடைக்கு பொறுப்பேற்காதது தான், தற்போது மற்றொரு இளைஞரின் மரணத்திற்கு காரணமாகியிருக்கிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…