Mon ,Dec 04, 2023

சென்செக்ஸ் 68,865.12
1,383.93sensex(2.05%)
நிஃப்டி20,686.80
418.90sensex(2.07%)
USD
81.57
Exclusive

நூறாண்டு காண வாழ்த்துக்கள்...இளையராஜாவிற்கு வாழ்த்து தெரிவித்த பாமக தலைவர்..!

madhankumar June 02, 2022 & 17:20 [IST]
நூறாண்டு காண வாழ்த்துக்கள்...இளையராஜாவிற்கு வாழ்த்து தெரிவித்த பாமக தலைவர்..!Representative Image.

இளையராஜா, அடுத்து நாட்டின் மிக உயர்ந்த பாரத ரத்னா விருதையும், தாதா சாகேப் பால்கே விருதையும் வென்று புதிய உச்சங்களைத் தொட வேண்டும் என்பதே தனது விருப்பம் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இசைஞானி இளையராஜா இன்று தனது 80 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு திரபிரபலன்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் மற்றும் அவரது ஆயிரக்கணக்கான ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர். 

இந்நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இளையராஜாவுக்கு பிறந்தாள் வாழ்த்துக்கள் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, முத்து விழா ஆண்டில், 80-ஆவது வயதில் அடியெடுத்து வைக்கும் உலகின் தலைசிறந்த இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இசைச்சக்கரவர்த்தியான அவர் நூற்றாண்டு காண பிரார்த்திக்கிறேன்.

இசைஞானியின் தீவிர ரசிகர்களில் நானும் ஒருவன். தாயின் தாலாட்டில் மயங்கி கண்ணுறங்கியது நான்கு ஆண்டுகள் என்றால் இந்த ஞானியின் தாளங்களில் மயங்கி  கண்ணுறங்கிய காலம் நாற்பதாண்டுகளுக்கும் அதிகம். எனது மகிழ்விலும், கவலையிலும் இசையாய் இளையராஜா என்னுடன் இருப்பார்.

மனக்காயங்களுக்கு இசை மருந்து போடுவதால் அவரும் ஒரு மருத்துவர். பயணத்தில் துணை வருவதால் அவர் இனிய வழித் தோழர். எவராலும் வெறுக்க முடியாத எல்லோராலும் நேசிக்க முடிந்த மனிதர்களில் முதலாமவர் இளையராஜா. அவரது இசைச் சேவை தொடர வேண்டும்.

இந்தியாவின் இரண்டாவது மிக உயரிய பத்ம விபூஷன் விருதை பெற்றுள்ள இளையராஜா, அடுத்து நாட்டின் மிக உயர்ந்த  பாரதரத்னா விருதையும், தாதா சாகேப் பால்கே விருதையும் வென்று புதிய உச்சங்களைத் தொட வேண்டும் என்பதே எனது விருப்பம் அது வெகுவிரைவில் நிறைவேற வேண்டும் என பதிவிட்டுள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்