காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து இடம்பெயர்ந்து ஜம்முவில் வாழும் காஷ்மீர் பண்டிட்கள், காஷ்மீர் பள்ளத்தாக்கில் தங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், நேற்று ஜம்மு-அக்னூர் சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தெற்கு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் உள்ள சவுத்ரி குண்ட் பகுதியில் உள்ள தனது வீட்டின் அருகே நேற்று மதியம் புரான் கிரிஷன் பட் பயங்கரவாதிகளால் சுடப்பட்டதில் உயிரிழந்தார்.
பிரதமரின் வேலைவாய்ப்புத் தொகுப்பின் கீழ் அங்கு பணியமர்த்தப்பட்ட பண்டிட்டுகள், கடந்த மே மாதம் காஷ்மீரில் தங்கள் சக ஊழியர் ராகுல் பட் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து கடந்த ஐந்து மாதங்களாக ஜம்முவில் உள்ள நிவாரண ஆணையர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், தற்போது மேலும் காஷ்மீரி பண்டிட் கொல்லப்பட்ட செய்தி வெளியானவுடன், அவர்கள் போராட்டத் தளத்திலிருந்து வெளியே வந்து, பிரதான சாலையை நோக்கி பேரணியாகச் சென்று, நெடுஞ்சாலையை மறித்து, பயங்கரவாதிகளின் தாக்குதலை கண்டித்தும், அரசாங்கத்தின் தோல்வியைக் கண்டித்தும் உச்சக்கட்ட முழக்கங்கள் எழுப்பினர்.
இதனால் ஜம்மு காஷ்மீரில் பதற்றம் நிலவி வருகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…