Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

Jayalalitha Death Case: ஜெயலலிதாவிற்கு ஆஞ்சியோ சிகிச்சை நடக்கவிடாமல் தடுத்ததே சசிகலா தான்.. ஆறுமுகசாமி ஆணையம் வெளியிட்ட பகீர் தகவல்..

Nandhinipriya Ganeshan October 18, 2022 & 14:00 [IST]
Jayalalitha Death Case: ஜெயலலிதாவிற்கு ஆஞ்சியோ சிகிச்சை நடக்கவிடாமல் தடுத்ததே சசிகலா தான்.. ஆறுமுகசாமி ஆணையம் வெளியிட்ட பகீர் தகவல்..Representative Image.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக சந்தேகம் நிலவி வந்த நிலையில், ஆறுமுகசாமி முன்னிலையில் ஐந்து ஆண்டுகளாக விசாரணை நடத்தப்பட்டு வந்தது. அந்தவகையில், இன்று சட்டப்பேரவையில் பல அதிர்ச்சி அளிக்கும் விவரங்களை இந்த விசாரணை அறிக்கை அம்பலமாக்கி வருகிறது. 

கடந்த 2012 ஆம் ஆண்டில் மீண்டும் இணைந்த சசிகலா, ஜெயலலிதா இடையே சுமுக உறவு இல்லை என்ற பரபரப்பு தகவல் ஆணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுல்லாமல், ஜெயலலிதாவின் உடல் நலக்குறைவு, அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த உண்மை நிலையை வெளிப்படுத்த தவறியதாகவும் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

அந்த வகையில், எய்ம்ஸ் மருத்துவக் குழு 5 முறை அப்பல்லோ வந்திருந்தாலும் ஜெயலலிதாவிற்கு சரியாக சிகிச்சை அளிக்கப்படவில்லை. அவரின் சிகிச்சையில் நிறைய தவறுகள் உள்ளன. சிகிச்சை மட்டுமின்றி சிகிச்சை தொடர்பான வெளியான விவரங்களில் நிறைய தவறுகள் உள்ளன.

அதுமட்டுமல்லாமல், ஜெயலலிதாவின் தனி மருத்துவர் கே.எஸ்.சிவகுமார் முறையான தொடக்க சிகிச்சைகளை வழங்கவில்லை. அமெரிக்காவில் இருந்து வந்த டாக்டர் சமீன் சர்மா, ஜெயலலிதாவுக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைத்திருந்தார். ஆனால் அது நடக்கவில்லை. இந்த சிகிச்சை செய்தால் ஜெயலலிதா உடல் நலம் மோசமாகி இருக்காது. 

அதேபோல், ஜெயலலிதாவிற்கு ஆஞ்சியோ அளிக்கப்படவில்லை. ஆஞ்சியோ அளிக்கப்பட்டதாக வெளியான செய்தியும் தவறே. ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கவிடாமல் சசிகலா தடுத்து உள்ளார். சசிகலா குடும்பத்தினர், அப்பல்லோ மருத்துவமனையின் 10 அறைகளை ஆக்கிரமித்து தங்கியுள்ளனர்.

வெளிநாட்டில் சிகிச்சையளிக்க பரிந்துரைத்தும் ஒரு தனி நபர் முட்டுக்கட்டை போட்டதால் அது நடக்கவில்லை. சசிகலா - ஜெயலலிதா இடையே நல்ல உறவு இல்லாதே இதற்கெல்லாம் காரணம் என்று அந்த ரிப்போர்ட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்