Tue ,Dec 05, 2023

சென்செக்ஸ் 68,865.12
1,383.93sensex(2.05%)
நிஃப்டி20,686.80
418.90sensex(2.07%)
USD
81.57
Exclusive

உயரும் ஆட்டோ கட்டணம்...புதிய கட்டணம் எவ்வளவுன்னு தெரியுமா?

madhankumar June 10, 2022 & 11:45 [IST]
உயரும் ஆட்டோ கட்டணம்...புதிய கட்டணம் எவ்வளவுன்னு தெரியுமா?Representative Image.

தமிழகத்தில் வரும் நாட்களில் ஆட்டோ கட்டணங்கள் உயர வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

தமிழ்நாட்டில் உரிய விதிமுறைகளைப் பின்பற்றி ஆட்டோ கட்டணங்களை வசூலிப்பதில்லை என்ற புகார் நீண்ட காலமாகவே உள்ளது. அரசு நிர்ணயம் செய்ததைவிடக் கூடுதல் கட்டணத்தை வசூலிக்கப்படுக புகார்கள் எழுந்தன. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உடனடியாக நேரடியாக தலையிட்டு, தீர்வு காண வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த நிலையில் சென்னையில் ஆட்டோக்களில் மீட்டர் கட்டணம் வசூல் செய்ய வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது. அப்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றத்திற்கு ஏற்ப மீட்டர் கட்டணத்தை மாற்றியமைக்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது. மேலும் சரியான ஆட்டோ கட்டணத்தை நிர்ணயம் செய்து, அவை வசூலிக்கப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க அரசுக்கு அறிவுறுத்தினர்.

கடைசியாகத் தமிழ்நாட்டில் கடந்த 2013இல் ஆட்டோ கட்டணங்கள் மாற்றி அமைக்கப்பட்டன. அதன் பின்னர், குறிப்பாக கடந்த சில ஆண்டுகளில் பெட்ரோல்-டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலை பெரியளவு உயர்ந்துவிட்டது.

இந்நிலையில் புதிய கட்டணமாக 1.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.50 மற்றும் அதன் பின்னர் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.25 என்று மாற்றி அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. மேலும், காத்திருப்பு கட்டணமாக ஒரு நிமிடத்திற்கு ரூ.1 வசூலிக்க வேண்டும் என்றும் தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

இந்தச் சூழலில் ஆட்டோக்களலிஸ் முதல் 1.5 கிலோ மீட்டருக்கு 40 ரூபாயும் கூடுதலான ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 18 ரூபாயாகவும் உயர்த்த பரிந்து அளிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பா அரசு அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்