Sat ,Dec 09, 2023

சென்செக்ஸ் 69,825.60
303.91sensex(0.44%)
நிஃப்டி20,969.40
68.25sensex(0.33%)
USD
81.57
Exclusive

அரிஹாவை இந்தியாவுக்குத் திருப்பித் தர ஜெர்மன் அதிகாரிகளிடன் கோரிக்கை..! | Baby Ariha Shah Germany

Gowthami Subramani Updated:
அரிஹாவை இந்தியாவுக்குத் திருப்பித் தர ஜெர்மன் அதிகாரிகளிடன் கோரிக்கை..! | Baby Ariha Shah GermanyRepresentative Image.

கடந்த 2021 ஆம் ஆண்டு ஜெர்மனியின் இளைஞர் நலன் காப்பகத்தின் காவலில் வைக்கப்பட்டுள்ள அரிஹா ஷா-வை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்புமாறு அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.

குஜராத்தி சாஃப்ட்வேர் இன்ஜினியர் பவேஷ் ஷா, மற்றும் அவரது மனைவி தாராவிற்குப் பிறந்தவர் அரிஹா. அரிஹா பிறப்பதற்கு முன்பே 2018 ஆம் ஆண்டில் தனது மனைவியுடன் பவேஷ் பெர்லினுக்குக் குடிபெயர்ந்தார். அரிஹா 2021 ஆம் ஆண்டு ஜெர்மன் தலைநகரில் பிறந்தார். செப்டம்பர் மாதத்தில் அரிஹாவை, ஜெர்மனியின் ஜூஜெண்டாம்ட் திடீரென அழைத்துச் சென்றுள்ளனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தாரா, “அரிஹாவின் பாட்டி சமீபத்தில், அரிஹாவைப் பார்க்க பெர்லினுக்குச் சென்றதாக கூறினார். துரதிஷ்டவசமாக, அவர் குழந்தையை காயப்படுத்தினார். இதில், அவளது வெளிப்புற பிறப்புறுப்பு பகுதியில் காயத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது, பாலியல் வன்கொடுமை என சந்தேதிக்கப்பட்டு அதிகாரிகள் எச்சரித்தனர்”

இது ஜூஜெண்டாம்ட்டை துரித நடவடிக்கை எடுக்கத் தூண்டி, குழந்தையை உடனடியாக குழந்தை வளர்ப்புப் பராமரிப்பிற்கு அழைத்துச் சென்றது. மேலும், குழந்தையைப் பார்ப்பதற்கு பதினைந்து நாள்களுக்கு ஒரு முறை பெற்றோர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதே சமயம், பெற்றோர்கள் மீது குழந்தை பாலியல் வன்கொடுமை வழக்கை அதிகாரிகள் பதிவு செய்தனர்.

அதன் பிறகு, விசாரணை நடத்தப்பட்டு, இந்த தாக்குதல் குற்றச்சாட்டு கைவிடப்பட்டு, அதற்குப் பதில், பெற்றோர்கள் அலட்சியமாக இருப்பதாக குற்றம் சாட்டியது. இருப்பினும், பெற்றோர்களுக்கு எதிரான வழக்குக் கடந்த பிப்ரவரி 2022 ஆம் ஆண்டில் மூடப்பட்டது.

இருப்பினும், குழந்தையை மீண்டும் பெற்றோரிடம் ஒப்படைக்கவில்லை. அதற்குப் பதில் ஜூஜென்டாம்ட், பெற்றோரின் உரிமைகள் மற்றும் குழந்தைகளின் நிரந்தரக் காவலை நிறுத்துவதற்கு, சிவில் காவல் வழக்கைத் தாக்கல் செய்தது. அப்போது இருந்து, குழந்தையின் பாதுகாப்பிற்காக, பெற்றோர்கள் சட்டப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் இந்தியா, பிரிந்த குடும்பத்தை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. கடந்த ஜூன் 2 ஆம் நாள் வெளி விவகார அமைச்சகம், குழந்தை ஒரு இந்திய நாட்டவர் என்பதாலும், 2021 ஆம் ஆண்டில் ஜெர்மனியின் இளைஞர் நலன் காப்பகத்தின் காவலில் வைக்கப்பட்டுள்ளதால், அரிஹாவைத் திருப்பித் தரக்கோரி, ஜெர்மன் அதிகாரிகளிடம் வெளியுறவுத் துறை அமைச்சகம் கோரிகை விடுத்துள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்