Mon ,Apr 22, 2024

சென்செக்ஸ் 73,694.27
605.94sensex(0.83%)
நிஃப்டி22,362.00
215.00sensex(0.97%)
USD
81.57
Exclusive

போலீஸ் ஸ்டேஷனில் வைத்து நடந்த வளைகாப்பு....நெகிழ்ச்சி சம்பவம்..!

madhankumar July 23, 2022 & 18:06 [IST]
போலீஸ் ஸ்டேஷனில் வைத்து நடந்த வளைகாப்பு....நெகிழ்ச்சி சம்பவம்..!Representative Image.

புதுக்கோட்டை மாவட்டம் பெருஞ்சுனை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயந்தி (25). அன்னவாசல் காவல் நிலையத்தில் பெண் போலீசாக பணியாற்றி வரும் இவர், ஊர்க்காவல் படையில் பணியாற்றும் அன்னவாசல் அடுத்த புல்வயலை சேர்ந்த பிரசாத் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

இவர்களது திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் கணவர் பிரசாத்துடன் தனியாக வசித்து வருகின்றனர். திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் ஜெயந்தி தற்போது கர்ப்பிணியாக உள்ளார். பெற்றோர் அரவணைப்பு இல்லாத இந்த பெண் காவலரை ஊக்கப்படுத்தும் விதமாக சக போலீசார் காவல் நிலையத்தில் வளைகாப்பு விழா நடத்துவது என்று முடிவு செய்தனர். அதற்காக உயர் அதிகாரிகளிடம் அனுமதி பெற்றனர்.

இதையடுத்து நேற்று கணவர் பிரசாத்தை காவல் நிலையத்திற்கு அழைத்தது வளைகாப்பு நடத்தினர். மூத்த பெண் காவலர்கள், ஜெயந்திக்கு வளையல் அணிவித்தும், சந்தனம், குங்குமம் பூசியும் வாழ்த்து தெரிவித்தனர். இதில் கலந்துகொண்ட இலுப்பூர் டிஎஸ்பி அருள்மொழி அரசு, இன்ஸ்பெக்டர்கள் சந்திரசேகரன் (அன்னவாசல்), உஷா நந்தினி (இலுப்பூர்) மற்றும் சக காவலர்களும் வாழ்த்தினர். தொடர்ந்து எலுமிச்சை, புளி, புதினா, தயிர், சாம்பார் சாதம் உட்பட  5 வகையான சாதங்கள் வந்தவர்களுக்கு பரிமாறப்பட்டது


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்