இந்தியாவில் போதை பொருட்கள் மற்றும் புகையிலை பொருட்கள் ஆகியவை தற்போது அதிகரித்து காணப்படுகிறது. வயது வித்தியாசம் இல்லாமல் சிறியவர்கள் முதல் வயதானவர்கள், பெண்கள் என அனைவரும் போதை பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர். இதனால் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி உயிரிழக்கும் அபாயமும் நிகழ்ந்து வருகிறது. இதனை தடுக்க அரசு அவ்வப்போது பல சட்டங்களை கொண்டு வருகிறது.
இந்நிலையில் ஏற்கனவே தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் அல்லது வேறு பொருட்களை மக்கள் மத்தியில் நினைவு படுத்தும் வகையில் விளம்பரம் செய்வதற்கு அதிரடி தடை விதித்துள்ளது. உதாரணமாக சோடா, பான் மசாலா ஆகிய விளம்பரங்களுக்கு தடை விதித்துள்ளது.
மக்களை திசை திரும்பும் விளம்பரங்கள் மற்றும் அவற்றுக்கு ஒப்புதல் அளிப்பதை தடை செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில், “ஆதாரம் இல்லாத உரிமை கோரல்கள், மிகைப்படுத்தப்பட்ட வாக்குறுதிகளை அளித்தல், தவறான தகவல்களை அளித்தல் போன்றவற்றால் நுகர்வோர் ஏமாற்றப்படாமல் இருப்பதை இந்த வழிகாட்டு நெறிமுறைகள் உறுதி செய்கின்றன.
அந்த வழிகாட்டு நெறிமுறையை விதிமுறைகளை மீறுபவர்களுக்கான தண்டனை விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. விளம்பரம் செய்வோர் தவறாக வழிகாட்டும் விளம்பரங்களுக்கு ஒப்புதல் அளிப்போர் ஆகியோருக்கு ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்க முடியும். தொடர்ந்து தவறு செய்வோருக்கு ரூ.50 லட்சம் வரையும் அபராதம் விதிக்கப்படலாம். மேலும் தவறாக வழிகாட்டும் நிறுவனங்களுக்கும், இத்தகைய விளம்பரங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் நிறுவனங்களுக்கும் ஓராண்டு முதல் 3 ஆண்டுகள் வரை தடை விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…