குமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள பிரதான சுற்றுலாத் தலமான திற்பரப்பு அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக 48 அடியை கொண்ட பேச்சிப்பாறை ஆணை 45 அடியை எட்டியதால் அணையில் இருந்து 1000கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் உபரி நீர் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டியது இதனால் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு நேற்று முன்தினம் முதல் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் மாவட்டத்தில் பெய்து வரும் தென்மேற்க்கு பருவமழை சற்று குறைந்து பெய்து வருவதாலும் பேச்சிப்பாறை அணையில் இருந்து திறந்துவிடப்படும் நீர் கோதையற்பட்டனம் பாசனத்திற்கு திறந்துவிடப்பட்டதாலும் அணையில் இருந்து திறந்து வெளியேற்றம் செய்துவந்த உபரிநீரை முழுமையாக நிறுத்தி வைத்தது. இதனால் அருவியில் வரும் நீரின் அலைவு குறைந்தது எனவே அறிவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…