Thu ,Dec 07, 2023

சென்செக்ஸ் 69,653.73
357.59sensex(0.52%)
நிஃப்டி20,937.70
82.60sensex(0.40%)
USD
81.57
Exclusive

வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்....எத்தனை நாள் தெரியுமா?

madhankumar June 10, 2022 & 08:55 [IST]
வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்....எத்தனை நாள் தெரியுமா?Representative Image.

நாடு முழுவதும் உள்ள வங்கி ஊழியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாத கடைசி சனி, ஞாயிறு தினங்கள் (ஜூன் 25,26ம் தேதிகள்) விடுமுறை தினங்களை அடுத்து ஜூன் 27 திங்கட்கிழமை வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர், இதனால் மூன்று நாட்கள் வங்கி பணிகள் முடங்க வாய்ப்புகள் உள்ளது.

இந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு, அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம், தேசிய வங்கி ஊழியர்கள் அமைப்பு உள்ளிட்ட 9 சங்கங்களை உள்ளடக்கிய வங்கி சங்கங்களின் ஒருங்கிணைப்பு அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. 

இதுகுறித்து அனைத்து வங்கி ஊழியர்கள் அமைப்பின் பொது செயலாளர் வெங்கடாசலம் கூறியபோது, அணைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் ஓய்வூதியத்தை மறுசீரமைப்பு செய்ய வேண்டும், மேலும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும், வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், நிலுவை தொகைகளை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 27ம் தேதி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்தார்.

மேலும் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் நாடு முழுவதும் உள்ள 7 லட்சம் வங்கி ஊழியர்கள் ஈடுபடப்போவதாக தெரிவித்துள்ளார். இதனால் வாங்கி சேவைகள் முற்றிலும் பாதிக்கப்படும் எனவும், மேலும் ஏடிஎம் கலீல் போதிய பண இருப்பு இருக்காது இதனால்  பரிவர்த்தனைகளை எவ்வாறு மேற்கொள்ள போகிறார்கள் என்ற அச்சம் எழுந்துள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்