India : இந்தியாவில் வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகார கூட்டமைப்பு வரும் 27 ஆம் தேதி வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் செயல்படும் வங்கிகளில் பணி செய்யும் ஊழியர்கள் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 27 ஆம் தேதி வேலை நிறுத்த போராட்டம் செய்ய உள்ளதாக வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அதன்படி, வாரத்தில் இரண்டு நாட்கள் விடுமுறை, ஓய்வூதியத்தை மாற்றி அமைத்தல், பழைய ஓய்வூதியத்திட்டத்தை நிறைவேற்றுதல், நிலுவையில் உள்ள பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு காணுதல் ஆகிய 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி pஓராட்டம் நடத்த உள்ளனர்.
இதனால், ஜூன் 25,26 ம் தேதி விடுமுறை என்பதால் திங்கட்கிழமை 27 ம் தேதி வேலை நிறுத்த போராட்டம் நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…