Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

பலத்த சத்தம்.. பதறிய பயணிகள்.. திடீரென தடம் புரண்ட சென்னை இரட்டை அடுக்கு ரயில்.. யாருக்கு என்னாச்சு?

Nandhinipriya Ganeshan Updated:
பலத்த சத்தம்.. பதறிய பயணிகள்.. திடீரென தடம் புரண்ட சென்னை இரட்டை அடுக்கு ரயில்.. யாருக்கு என்னாச்சு?Representative Image.

மே 15 திங்கள் அன்று, சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கிச் சென்ற டபுள் டெக்கர் எக்ஸ்பிரஸ் ரயில் [ரயில் எண்.22625], பங்கார்பேட்டையில் இருந்து சுமார் 20 கிமீ தொலைவில் உள்ள பிசாநத்தம் நிலையத்தில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. மே 15 ஆம் தேதி காலை 11:30 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. இந்த பெட்டியில் சுமார் 130 பயணிகள் இருந்துள்ளனர். ஆனால், இந்த சம்பவத்தால் யாருக்கும் காயங்களோ உயிரிழப்புகளோ ஏற்படவில்லை. 

ரயில் பெட்டியில் இருந்த பயணிகள் உடனடியாக C2, C3 மற்றும் C4 பெட்டிகளில் உள்ள மற்ற இருக்கைகளுக்கு மாற்றப்பட்டனர். ரயில் பெட்டி ரயிலில் இருந்து துண்டிக்கப்பட்டு, மீதமுள்ள ரயில்  பெட்டிகளுடன் புறப்பட்டது. மேலும் ரயில் தடம் புரண்டதால், ரயில் செல்லும் பாதையில் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து எட்டு ரயில்களின் போக்குவரத்து நேரம் மாற்றியமைக்கப்பட்டு, டீசல் எஞ்சின்களுக்கு மாலை 5 மணீக்கும், மின்சார எஞ்சின்களுக்கு மாலை 6.20 மணிக்கும் பாதை சீரமைக்கப்பட்டது. ரயில் தடம் புரண்டதற்கான காரணத்தை கண்டறியும் பணியில் தென்மேற்கு ரயில்வே ஈடுபட்டு வருகிறது.  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்