பீகாரில் கட்டுமானப் பணியில் இருந்து வரும் பாலம் இரண்டாவது முறையாக சரிந்துள்ளது எனக் கூறப்பட்டது அதிர்ச்சியைத் தருகிறது.
பீகாரில் கங்கையின் குறுக்கே கட்டப்பட்டு வரக்கூடிய நான்கு பாலமான சுல்தங்கஞ்ச் – அகுவானி காட் பாலம், கட்டுப்பானப் பணியில் பெரும் பின்னடைவாக உள்ளது. பாகல்பூரில் உள்ள சுல்தங்கஞ்ச் மற்றும் ககாரியாவை இணைக்கக் கூடிய இதன் சூப்பர் கட்டமைப்பு, நேற்று மாலை இடிந்து விழுந்தது. இதனால், பல தூண்களின் குறைந்தது 30 அடுக்குகள், மற்றும் தூண் எண் 9, 10, 11 போன்றவை 100 அடி அளவில் சரிந்தது.
மேலும், இந்த பாலத்தின் மதிப்பீடானது ரூ.1,710 கோடியாக கூறப்படுகிறது. இந்த அதிக அளவிலான மதிப்பீட்டில் கட்டப்பட்ட இந்தப் பாலம் இரண்டாவது முறையாக விழுந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஏப்ரல் 2022 ஆம் ஆண்டில் தூண் எண்கள் 4, 5, மற்றும் 6 போன்றவை சரிந்தது. இந்த விபத்தானது மோசமான கட்டுமானப் பொருள்களைப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டினர். மேலும், இதற்கு தளர்வான கேபிள் ஸ்டாண்ட் காரணமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்தப் பாலம் கட்டமைப்புக்கு கடந்த பிப்ரவரி 23, 2014 ஆம் ஆண்டில் நிதிஷ் அடிக்கல் நாட்டினார். இந்தப் பாலம் மார்ச் 2020-க்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 3 ஆண்டுகளுக்கும் மேலாக தாமதமாக முடிக்கப்பட்டது. ஆனால், கட்டமைப்பில் இருக்கும் போதே இரண்டு முறை இடிந்து விழுந்தது பெரும் பின்னடைவாக உள்ளது.
பாலம் இடிந்து விழுந்தது குறித்து முதல்வர் நிதிஷ் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். மேலும், இதற்குக் காரணமானவர்களைக் கண்டறிந்து அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறும் மாநில சாலை கட்டுமானத் துறை கூடுதல் தலைமைச் செயலாலர் பிரத்யா அம்ரித் கேட்டுக் கொண்டுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…