Mon ,Dec 11, 2023

சென்செக்ஸ் 70,028.54
202.94sensex(0.29%)
நிஃப்டி21,019.00
49.60sensex(0.24%)
USD
81.57
Exclusive

தனுஷ் பட பாணியில் கால்நடை மருத்துவருக்கு கால்கட்டு....துப்பாக்கி முனையில் கல்யாணம்...!

madhankumar June 16, 2022 & 11:28 [IST]
தனுஷ் பட பாணியில் கால்நடை மருத்துவருக்கு கால்கட்டு....துப்பாக்கி முனையில் கல்யாணம்...!Representative Image.

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ஹிந்தி திரைப்படமான அத்ராங்கிரே, இந்த படத்தில் மருத்துவ மாணவனாக தனுஷ் நடித்திருப்பார். இவரை கதாநாயகியின் குடும்பத்தினர் கடத்திக்கொண்டு போய் சிரிப்பூட்டும் வாயுவை சுவாசிக்க செய்து மயக்கி கட்டாய கல்யாணம் செய்து வைப்பார். அதில் தனுஷ் அழுதுகொண்டே மணப்பெண்ணின் நெற்றியில் குங்குமம் வைப்பார் அந்த காட்சி பார்ப்போரது மனதில் ரணத்தை உண்டாகும்.

தற்போது அதே பாணியில் பீகார் மாநிலத்தி ஒரு திருமணம் நடந்துள்ளது. கால்நடை மருத்துவரான சத்யம் குமாருக்கு இரவில் தங்களது கால்நடைக்கு உடல் நிலை சரியில்லை என கூறி அழைப்பு ஒன்று வந்துள்ளது, அதனை நம்பி அங்கி விரைந்துள்ளார் மருத்துவர். அனால் சென்ற இடத்தில் தான் அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. மருத்துவரை பிடித்து கட்டாயப்படுத்தி துப்பாக்கி முனையில் மணப்பெண்ணுக்கு தாலி கட்ட வைத்துள்ளனர். மருத்துவரும் அழுதுகொண்டே தாலி கட்டியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பாதிக்கப்பட்ட மருத்துவரின் உறவினரிடம் கேட்ட போது, நள்ளிரவு 12 மணியளவில் கால்நடைக்கு உடல் நிலை சரியில்லை என கூறி அழைப்பு வந்தது, உடனே புறப்பட்டு சென்ற அவரை மூன்றுபேர் கொண்ட கும்பல் கடத்தி சென்று கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளனர். இதுகுறித்து போலீசிடம் புகார் அளித்துள்ளோம் என கூறியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக மணமகனின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பெகுசாராய் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் யோகேந்திர குமார் தெரிவித்துள்ளார். 

சில ஆண்டுகளுக்கு முன்பு, பீகாரில் பொகாரோ ஸ்டீல் ஆலையில் ஜூனியர் மேனேஜராக இருந்த 29 வயதான வினோத் குமார், பாட்னாவில் உள்ள பண்டாரக் பகுதியில் கடத்தப்பட்டு கடுமையாகத் தாக்கி திருமணம் செய்து வைக்கபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்