Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

கூட்டணி எல்லாம் கிடையாது.. அடுத்த தேர்தலில் Solo தான்.. அமித் ஷா உறுதி!!

Editorial Desk Updated:
கூட்டணி எல்லாம் கிடையாது.. அடுத்த தேர்தலில் Solo தான்.. அமித் ஷா உறுதி!!Representative Image.

தனது கட்சியின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் வகையில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 2023-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிடப் போவதாக இன்று அறிவித்தார். 

மேலும் எச்.டி.குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி என்ற பேச்சு வெறும் வதந்தி என்று அவர் மேலும் கூறினார்.

"மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் தொடர்புடையவர்கள் பாஜகவுடன் கூட்டணி அமைக்கப் போவதாக வதந்திகளை பரப்பி வருகின்றனர். கர்நாடகாவில் பாஜக தனித்து போட்டியிடும் என்றும், மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் என்றும் நான் தெளிவாக கூற விரும்புகிறேன்" என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பெங்களூரில் இன்று தெரிவித்தார்.

மேலும் பேசிய அமித் ஷா, "காங்கிரஸைப் பொறுத்தவரை, அதிகாரத்தைப் பெறுவது ஒரு வழியாகும். ஆனால் எங்களுக்கு இது மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதாகும். சமீபத்தில் 7 மாநிலங்களில் நடந்த தேர்தலில் பாஜக 5 மாநிலங்களில் வெற்றி பெற்றது. 6 மாநிலங்களில் காங்கிரஸ் அழிக்கப்பட்டது." என்றார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்