ஆண்டுதோறும் பிப்ரவரி 21 ஆம் நாள் காதலர் எதிர்ப்பு நாளாகக் கொண்டாடப்படுகிறது. காதலர் தினம் எப்படி இருக்கிறதோ காதலர் எதிர்ப்பு தினமும் கொண்டாடப்படுகிறது. காதலர் வாரம் எப்படி உள்ளதோ, அதே போல காதலர் எதிர்ப்பு வாரமும் உள்ளது. இது அதிகாரப்பூர்வ காதலர் தினமான பிப்ரவரி 14 ஆம் நாளுக்கு அடுத்த நாள் தொடங்குகிறது. காதலால் துயரங்களையும், கஷ்டத்தையும் அனுபவித்தவர்களைக் கொண்டாடும் வகையிலேயே காதலர் பிரேக் அப் தினம் கொண்டாடப்படுகிறது. இதற்கு பல்வேறு கட்ட காரணங்களும் இருக்கின்றன. அவற்றைப் பற்றி இங்குக் காணலாம்.
காதல் தானே என சாதாரணமாக நினைத்து விடுபவர்களுக்கு மத்தியில் காதலால் ஏற்பட்ட கஷ்டங்களும் துன்பங்களும் பட்டவர்கள் ஏராளம். இது அவர்களுக்கான தினம் ஆகும். இந்த தினத்தில் காதலித்து பல்வேறு கட்ட கஷ்டங்களைக் கடந்து தனியாக தன் வாழ்க்கையில் போராடும் நபர்களுக்கான தினமாகும். இந்த தினமானது, பிப்ரவரி நாள்களில் காதலுக்கான பட்டியலில் கடைசி நாளாகக் கொண்டாடப்படுகிறது.
இந்த தினத்தை அனைவரும் கொண்டாடுவதில்லை. ஆனால், காதலில் பிரச்சனைகளைச் சந்தித்து, முறிவு ஏற்பட்டு வாழ்க்கையில் தனியாக இருக்க கூடிய நபர்களைக் கொண்டாடும் வகையில் காதலர் எதிர்ப்பு வாரம் கொண்டாடப்பட்டது. இந்த தினமானது, காதலர்கள் எப்படி காதல் பிரிவிலிருந்து வெளியேறினார்கள் என்பதையும் எடுத்துக் கூறும் விதமாக அமையும். இந்த தினமானது காதலர்கள் தனது அன்புக்குரியவரைத் தவற விட்டவர்களைக் கொண்டாடும் விதமாக அமைவதாகும்.
உறவுகளில் பிரிவுகள் ஏற்படுவது வழக்கம். அதற்கென ஒரு தனிப்பட்ட காரணங்கள் இருக்கலாம். பொதுவாக, நாம் மிகவும் நேசிக்கும் ஒருவர், நம்மை நேசிக்காமல் நம்மை விட்டுச் செல்லும் போது அதிகமாக வலிக்கிறது. இந்த நாளில் ஒரு நபர் எப்படி இருக்க வேண்டும் என்ற குழப்பம் எழும். அதாவது பிரேக் அப் டே ஒருவருக்கு மகிழ்ச்சியைத் தருமா.? இல்லை கஷ்டத்தைத் தருமா.? இந்த பிரேக் அப் டே தினமானது ஒருவருக்குக் கஷ்டத்தை வழங்கக் கூடிய தினமாக இருப்பினும், அதனை மாற்றி சந்தோஷமாக இருப்பதைக் காட்ட வேண்டும். இது ஒருபுறம் உங்களுக்கு கஷ்டத்தைக் கொடுத்தாலும், மறுபுறம் நீங்கள் பிடிக்காத ஒரு உறவிலிருந்து வெளிவரும் தினமாகவும் அமையும். எப்படியானாலும், காதலர் தினமாக இருந்தாலும் சரி அல்லது காதலர் எதிர்ப்பு தினமாக இருந்தாலும் சரி. உங்களது வாழ்க்கையை நீங்கள் மகிழ்ச்சியாக மாற்றி அதற்கு ஏற்றாற் போல வாழ வேண்டும்.
இந்த சிறப்பான தினத்தில் அனைவரும் தேவையில்லாத கஷ்டங்களையும், துன்பங்களையும் மறந்து வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க பிரேக் அப் டே தின வாழ்த்துக்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…