Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 73,852.94
114.49sensex(0.16%)
நிஃப்டி22,402.40
34.40sensex(0.15%)
USD
81.57
Exclusive

கூலித்தொழிலாளி வங்கி கணக்கில் ரூ.2700 கோடி...திகைத்துப்போன வங்கி ஊழியர்கள்.!

madhankumar August 03, 2022 & 15:50 [IST]
கூலித்தொழிலாளி வங்கி கணக்கில் ரூ.2700 கோடி...திகைத்துப்போன வங்கி ஊழியர்கள்.!Representative Image.

உத்திரபிரதேசத்தில் கன்னுஜ் மாவதில் சிப்மராவ் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கமல்பூர் கிராமத்தை சேர்ந்தவர் பிஹாரி லால் (45) இவர் அந்த பகுதியில் உள்ள செங்கல் சூளையில் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் பிஹாரி லால் தனது பாங் ஆஃப் இந்தியா வங்கியின் ஏடிஎம்-இல் இருந்து 100 ரூபாயை எடுத்துள்ளார். அதன் பின்னர் அவரது செல்போனுக்கு வந்த குறுஞ்செய்தியை கண்டு அதிர்ந்துள்ளார். ஏனெனில் அந்த மெசேஜில் அவரது பாங் ஆஃப் இந்தியா வங்கிகணக்கில் இரண்டாயிரத்து 707 கோடியே 85 லட்சத்து 13 ஆயிரத்து 985 ரூபாய் இருந்தது.

உடனடியாக அந்த செய்தியை எடுத்துக்கொண்டு வங்கிக்கு சென்ற அவர் வாங்கி ஊழியரிடம் அது குறித்து கூறியுள்ளார். அப்போது வாங்கி ஊழியரும் அதனை பல முறை சோதித்து பார்த்துள்ளார், அப்போது எடுக்கப்பட்ட ஸ்டேட்மென்டிலும் அதே 2700 கோடி இருந்துள்ளது. தனது வங்கி கணக்கில் எவ்வாறு இவ்வளவு பணம் வந்தது என யோசித்துக்கொண்டிருந்த பிஹாரி லால் சந்தோடமாக இருந்தார், ஆனால் சற்று நேரத்தில் அந்த சந்தோஷத்தில் இது விழுந்தது, காரணம் அந்த ஏடிஎம் கார்டை மற்றொரு ஏடிஎம்-இல் போட்டு சோதித்து பார்த்தபோது அதில் வெறும் ரூ.126 மட்டுமே இருந்துள்ளது. 

இதுகுறித்து பேசிய வங்கி அதிகாரிகள் இது முற்றிலும் டெக்னிக்கல் பிழை தான், அவரது வங்கிக்கணக்கில் வெறும் 126 ரூபாய் தன இருந்தது, அவரது வாங்கிக்கணக்கை முடக்கிவைத்து சோதித்து பார்த்ததில் இந்த பிழை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்