பீகாரின் ஹாஜிபூர் மாவட்டத்தில் நேற்று ஆயுதமேந்திய மூன்று கொள்ளையர்களை எதிர்த்துப் போராடிய இரண்டு துணிச்சலான பெண் கான்ஸ்டபிள்கள் வங்கிக் கொள்ளையை முறியடித்துள்ளனர், இதன் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
ஆயுதம் ஏந்திய மூன்று கொள்ளையர்கள் வங்கிக்குள் நுழைய முற்பட்டபோது, வங்கியின் காவலில் இருந்த பெண் காவலர்கள் எந்த தயக்கமும் இல்லாமல் அவர்களுடன் சண்டையிட முடிவு செய்தனர். இந்த சம்பவம் சதார் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட செந்துவாரி சௌக்கில் பதிவாகியுள்ளது.
சிசிடிவி காட்சிகளில் ஜூஹி குமாரி மற்றும் சாந்தி ஆகிய இரண்டு போலீஸ் கான்ஸ்டபிள்கள் வங்கியில் ஆயுதம் ஏந்திய மூன்று பேர் வலுக்கட்டாயமாக வங்கிக்குள் நுழைய முற்பட்ட போது வங்கிக்கு பாதுகாப்பு அளித்துள்ளனர்.
முகமூடி அணிந்த நபர்கள் வங்கியில் வந்தபோது, பாதுகாவலர்கள் தங்கள் ஆவணங்களைச் சமர்ப்பிக்கச் சொன்னார்கள். அப்போது ஒரு நபர் ஒரு கைத்துப்பாக்கியை எடுத்தார். ஆனால் ஜூஹி மற்றும் சாந்தி இருவரும் துணிச்சலாக மூவருக்கும் சவால் விடுத்தனர்.
அப்போது குற்றவாளிகள் பெண் காவலர்களின் துப்பாக்கிகளைப் பறிக்க முயன்றதால் ஒரு போராட்டம் ஏற்பட்டது. ஆனால் காவலர்கள் கடுமையாக போராடி கொள்ளையர்களை தாக்கிய நிலையில், இறுதியில் கொள்ளையர்கள் தப்பி ஓட முடிவு செய்தனர்.
கைகலப்பில் காயமடைந்த ஜூஹி குமாரி, தப்பியோடிய திருடர்களை சுட முயன்று, கொள்ளை முயற்சியை முறியடித்தார்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளை வைத்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…