Tue ,Apr 16, 2024

சென்செக்ஸ் 73,399.78
-845.12sensex(-1.14%)
நிஃப்டி22,272.50
-246.90sensex(-1.10%)
USD
81.57
Exclusive

ராஜ்யசபா எம்பி, கவர்னர் பதவிகள் 100 கோடிக்கு ஏலம்..? பகீர் மோசடி.. சிபிஐ அதிரடி நடவடிக்கை!!

Sekar July 25, 2022 & 19:23 [IST]
ராஜ்யசபா எம்பி, கவர்னர் பதவிகள் 100 கோடிக்கு ஏலம்..? பகீர் மோசடி.. சிபிஐ அதிரடி நடவடிக்கை!!Representative Image.

ராஜ்யசபா இடங்கள் மற்றும் கவர்னர் பதவி போன்றவற்றை பெற்றுத் தருவதாக பொய்யான வாக்குறுதிகளை அளித்து 100 கோடி ரூபாய் மோசடி செய்ய முயன்றதாகக் கூறி, பல மாநில ஆள்மாறாட்ட மோசடி ஒன்றை சிபிஐ முறியடித்து, நான்கு பேரை கைது செய்துள்ளது. 

இந்த வழக்கு தொடர்பாக சமீபத்தில் சிபிஐ சோதனை நடத்தியது மற்றும் கும்பலைச் சேர்ந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். சிபிஐ அதிகாரிகளை தாக்கிவிட்டு, சோதனை நடவடிக்கையின் போது குற்றவாளிகளில் ஒருவர் தப்பியோடிவிட்டார். 

இதையடுத்து சிபிஐ அதிகாரிகளைத் தாக்கியதற்காக உள்ளூர் காவல் நிலையத்தில் அவருக்கு எதிராக தனி எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிபிஐ தனது எப்ஐஆரில், இந்த வழக்கு தொடர்பாக மகாராஷ்டிராவின் லத்தூரைச் சேர்ந்த கமலாகர் பிரேம்குமார் பண்ட்கர், கர்நாடகாவின் பெல்காமைச் சேர்ந்த ரவீந்திர விட்டல் நாயக் மற்றும் டெல்லி-என்சிஆரைச் சேர்ந்த மகேந்திர பால் அரோரா, அபிஷேக் பூரா மற்றும் முகமது அய்ஜாஸ் கான் ஆகியோரின் பெயரைப் பதிவு செய்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்