மாணவர்களை எதிர்காலத்திருக்காக முழுமையாக தயார்படுத்தும் வகையில் பிஎம்ஸ்ரீ பள்ளிகள் உருவாக்க அரசு நடவடிக்கை எடுத்துவருவதாகவும் தேசிய கல்விக் கொள்கை 2020 திட்டத்தின் ஆய்வகமாக இந்த அதிநவீன பள்ளிகள் இருக்கும் என்றும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
நாடுமுழுவதும் உள்ள மாநில கல்வி அமைச்சர்கள் மாநாடு குஜராத் மாநிலம் காந்திநகரில் நடைபெற்றது. அதில் இரண்டாம் நாள் கூட்டத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தொடக்க உரை நிகழ்த்தினார்.
அப்போது பேசிய அவர், அறிவு சமுதாயத்தை உருவாக்க கல்வியே அடித்தளம், தேசியக் கல்விக் கொள்கை 2020 தொடக்கப் பள்ளி முதல் இடைநிலைப் பள்ளிக் கல்வி, ஆசிரியர் பயிற்சி, வயது வந்தோர் கல்வி, பள்ளிக் கல்வியுடன் திறன் மேம்பாட்டை ஒருங்கிணைத்தல் மற்றும் தாய்மொழிக் கல்விக்கு முன்னுரிமை அளித்தல் ஆகியவற்றை உள்ளடக்கியது என கூறியுள்ளார்.
மாணவர்களை எதிர்காலத்திற்கு முழுமையாக தயார்படுத்தும் வகையில் பிஎம் ஸ்ரீ பள்ளிகளை நிறுவ அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த மேம்பட்ட பள்ளிகள் தேசிய கல்விக் கொள்கை 2020 திட்டத்தின் ஆய்வகமாக இருக்கும். பிஎம் ஸ்ரீ பள்ளிகளை நிறுவுவதற்கான மாதிரியை உருவாக்க அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மற்றும் கல்வி அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
இந்த மாநாட்டில் தமிழகத்தை சேர்ந்த பள்ளிக்கல்வித்துறை அமைக்கிற அன்பில் மகேஷ் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…