இந்திய தலைமை நீதிபதி உதய் உமேஷ் லலித் நவம்பர் 8 ஆம் தேதி ஓய்வு பெறவுள்ள நிலையில், அவருக்குப் பின் புதிய தலைமை நீதிபதியை நியமிக்குமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
இந்திய தலைமை நீதிபதி மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் நியமன நடைமுறை படி, சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர், அடுத்த தலைமை நீதிபதி நியமனத்திற்கான பரிந்துரைகளை அனுப்புமாறு இந்திய தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
முன்னதாக கடந்த ஆகஸ்ட் 27 அன்று, ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி திரௌபதி முர்முவால் இந்தியாவின் தலைமை நீதிபதியாக பதவியேற்ற நீதிபதி லலித் ஓய்வு பெற இன்னும் ஒரு மாதமே உள்ளது.
ஆகஸ்ட் 26, 2022 அன்று ஓய்வு பெற்ற நீதிபதி என்.வி. ரமணாவுக்குப் பிறகு அவர் பதவியேற்றார். நீதிபதி ரமணா, மரபு மற்றும் சீனியாரிட்டி நெறிமுறைகளுக்கு ஏற்ப நீதிபதி லலித்தை தனது வாரிசாக பரிந்துரைத்தார். இதையடுத்து நீதிபதி லலித் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டதை குடியரசுத் தலைவர் உறுதி செய்தார்.
நீதிபதி லலித் பதவிக்காலம் நவம்பர் 8 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. தலைமை நீதிபதி சீனியாரிட்டி அடிப்படையில் தனக்கு அடுத்த இடத்தில் இருக்கும் நீதிபதியை தலைமை நீதிபதி பதவிக்கு பரிந்துரைப்பார். அதன்படி நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் இந்தியாவின் 50வது தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…