Wed ,Dec 06, 2023

சென்செக்ஸ் 69,296.14
431.02sensex(0.63%)
நிஃப்டி20,855.10
168.30sensex(0.81%)
USD
81.57
Exclusive

மதம் மாறினாலும் எஸ்சி சமூகத்தினருக்கான சலுகைகள்.. ஆய்வு செய்ய குழு அமைப்பு!!

Sekar October 07, 2022 & 16:09 [IST]
மதம் மாறினாலும் எஸ்சி சமூகத்தினருக்கான சலுகைகள்.. ஆய்வு செய்ய குழு அமைப்பு!!Representative Image.

வரலாற்று ரீதியாக எஸ்சி சமூகத்தை சேர்ந்தவர்கள் வேறு மதத்திற்கு மாறியிருந்தாலும், அவர்களுக்கு இட ஒதுக்கீடு மற்றும் சலுகைகளில் பட்டியல் சாதி அந்தஸ்து வழங்குவது குறித்து ஆய்வு செய்ய முன்னாள் தலைமை நீதிபதி கேஜி பாலகிருஷ்ணன் தலைமையிலான ஆணையத்தை மத்திய அரசு நியமித்துள்ளது.

மூன்று பேர் கொண்ட இந்த ஆணையத்தில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி டாக்டர் ரவீந்தர் குமார் ஜெயின் மற்றும் யுஜிசி உறுப்பினரான பேராசிரியை சுஷ்மா யாதவ் ஆகியோரும் உள்ளனர் என்று சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் வெளியிட்ட அரசிதழ் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 341 வது பிரிவின் கீழ் அவ்வப்போது வெளியிடப்படும் ஜனாதிபதி உத்தரவுகளுக்கு இணங்க இந்த ஆணையம் இந்த விஷயத்தை ஆராயும்.

இம்மக்கள் பிற மதங்களுக்கு மாறிய பிறகு, தற்போதுள்ள பட்டியல் சாதியினர், பழக்கவழக்கங்கள், மரபுகள் மற்றும் அவர்களின் சமூக பாகுபாடு மற்றும் தாழ்வு நிலை ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்களை கணக்கில் எடுத்துக்கொள்வதோடு, முடிவினால் ஏற்படும் தாக்கங்களையும் இந்த குழு ஆராயும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்