Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

டிஜிட்டல் நியூஸ் மீடியாக்களுக்கு வருகிறது தனி சட்டம்.. மத்திய அமைச்சர் உறுதி!!

Sekar Updated:
டிஜிட்டல் நியூஸ் மீடியாக்களுக்கு வருகிறது தனி சட்டம்.. மத்திய அமைச்சர் உறுதி!!Representative Image.

டிஜிட்டல் மீடியாவை ஒழுங்குபடுத்துவதற்கான மசோதாவை அரசாங்கம் உருவாக்கி வருவதாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு (ஐ&பி) அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.

நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், கடந்த காலங்களில் செய்தி பரிமாற்றம் ஒருவழியாக இருந்த நிலையில், தற்போது மின்னணு மற்றும் டிஜிட்டல் ஊடகங்களின் வளர்ச்சியின் காரணமாக பல பரிமாணங்களை உள்ளடக்கியதாக உருவாகியுள்ளது என்று கூறினார்.

தற்போது டிஜிட்டல் மீடியா ஒரு கிராமத்தில் இருந்து சிறிய செய்திகளை கூட தேசிய தளத்திற்கு சென்றடைய உதவுகிறது என்று கூறிய அனுராக் தாக்கூர், அரசாங்கம் பெரும்பாலான அச்சு, மின்னணு மற்றும் டிஜிட்டல் ஊடகங்களை சுய ஒழுங்குமுறைக்கு விட்டுவிட்டுள்ளது என்றார்.

மேலும் பேசிய ஐ&பி அமைச்சர் அனுராக் தாக்கூர், "டிஜிட்டல் மீடியா வாய்ப்புகளையும் சவால்களையும் முன்வைக்கிறது. நல்ல சமநிலையைப் பெற, இதில்   என்பதை அரசு ஆலோசித்து வருகிறது. சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்று நான் கூறுவேன். மேலும் உங்கள் வேலையை எளிமையாக்க நாங்கள் அதைக் கொண்டு வருவோம். இது தொடர்பாக ஒரு மசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ய நாங்கள் பணியாற்றி வருகிறோம்." என்று கூறினார்.

மேலும், 1867 ஆம் ஆண்டின் பத்திரிகை மற்றும் புத்தகப் பதிவுச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டத்தை மத்திய அரசு விரைவில் அறிமுகப்படுத்தும் என்றும், செய்தித்தாள்களுக்கான பதிவு செயல்முறை எளிமையாக்கப்படும் என்றும் ஐ&பி அமைச்சர் உறுதிப்படுத்தினார்.

புதிய சட்டத்தின் கீழ், தற்போது நான்கு மாதங்கள் எடுக்கும் பதிவு செயல்முறை, ஆன்லைன் முறையில் ஒரு வாரத்தில் முடிக்கப்படும் எனக் கூறினார்.

செய்தித்தாள்கள் சரியான செய்திகளை பொதுமக்கள் முன் சரியான நேரத்தில் கொண்டு வர வேண்டும் என்றும் அனுராக் தாக்கூர் கூறினார். அரசின் குறைபாடுகளுடன், மக்கள் நலத்திட்டங்களும், அரசின் கொள்கைகளும் சாமானிய மக்களை சென்றடைய வேண்டும் என்றார்.

ஊடகங்கள் தனது பணியை பொறுப்புடன் செய்ய வேண்டும் என்றும், பயம் மற்றும் குழப்பம் என்ற சூழ்நிலையை உருவாக்குவதைத் தவிர்க்கவும் அவர் வலியுறுத்தினார்.

இதற்கிடையில், ஊடகவியலாளர்களின் நலன்களை மத்திய அரசு பாதுகாக்கும் என்று அமைச்சர் உறுதியளித்தார். மேலும் கொரோனா காரணமாக இறந்த ஊடகவியலாளர்களின் குடும்பங்களுக்கு இந்த நிகழ்ச்சியில் நிதியுதவி வழங்கப்பட்டது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்