சென்னையில் பிறந்த 18 மாதமே ஆன மூளைச்சாவு அடைந்த குழந்தையின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஆந்திராவின் நெல்லூரைச் சேர்ந்த 18 மாதமே ஆன ஆண் குழந்தை ஒன்று, சமீபத்தில் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த நிலையில், தவறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழந்தை அனுமதிக்கப்பட்ட நிலையில், மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.
எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் குழந்தை மூளைச்சாவு அடைந்தது. இந்நிலையில், குழந்தை பிழைப்பதற்கான சாத்தியம் மிகவும் குறைவு என மருத்துவர்கள் கூறியதையடுத்து, குழந்தையின் பெற்றோர்கள், தங்கள் குழந்தையின் உடல் உறுப்புகளை தானமாக கொடுக்க முன்வந்தனர்.
இதையடுத்து குழந்தையின் இதயம், சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரல் ஆகியவை தானமாக பெறப்பட்டு அந்த உடல்க உறுப்புகள் தேவைப்பட்ட குழந்தைகளுக்கு பொருத்தப்பட்டது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…