Tue ,Jul 23, 2024

சென்செக்ஸ் 80,429.04
-73.04sensex(-0.09%)
நிஃப்டி24,479.05
-30.20sensex(-0.12%)
USD
81.57
Exclusive

சிதம்பரம் நடராஜர் கோயிலில் பூட்டை உடைத்து அத்துமீற முயற்சி!

Editorial Desk Updated:
சிதம்பரம் நடராஜர் கோயிலில் பூட்டை உடைத்து அத்துமீற முயற்சி!Representative Image.

உலகப்பிரசித்திப் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் பூட்டை உடைத்து திருட முயன்றவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயிலின் நடன சபை அருகே தெற்கு பகுதியில் பெரிய இரும்பு கேட் ஒன்று போடப்பட்டு, அதில் 2 பூட்டுகள் பூட்டப்பட்டுள்ளது. நேற்று இரவு பக்தர்கள் கோயிலுக்குள் சாமி கும்பிட்டு கொண்டிருந்தபோது, சிதம்பரத்தை அடுத்த மணலூர் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த் (29) என்பவர் இரண்டு பூட்டுக்களையும் உடைத்துள்ளார். 

 

இதனைக் கண்ட அங்கிருந்த மக்கள் மற்றும் தீட்சிதர்கள் ஆனந்தை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைந்துள்ளனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து கோயிலின் பூட்டை உடைத்து திருட முயன்றதாக ஆனந்த் மீது மூன்று பிரிவுகளின் கீழ் சிதம்பரம் நகர போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். தெற்கு கோபுர வாயில் தீண்டாமையின் சுவராக கருதி மூடப்பட்டுள்ள நிலையில் அந்த சுவர் உள்ள பகுதிக்கான பூட்டுக்களை ஆனந்த் உடைத்துள்ளது பரபரப்பை உருவாக்கியுள்ளது.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்