தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்றுவருகிறது. தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் சட்டப்பேரவையில் அறிவித்த திட்டங்கள் குறித்து இரண்டு நாட்கள் ஆலோசனை கூட்டமானது நடைபெற உள்ளது.
சிறப்பு திட்ட அமலாக்க துறையில் கீழ் இந்த கூட்டமானது இன்று மற்றும் நாளை நடைபெற உள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அனைத்து துறை செயலாளர்கள், கிளை செயலாளர்கள், தமிழக அரசின் முக்கிய அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் அரசு அறிவித்த திட்டங்கள் குறித்தும் சட்டப்பேரவையில் அறிவித்த திட்டங்களின் நிலை என்ன என்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. நகராட்சி, நீர்வளம், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை,மின் துறை, தொழில் துறை உள்ளிட்ட 19 துறை செயலாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். அனைத்து மாவட்டங்களுக்கும், அனைத்து அறிவிப்புகளும் சென்றடைய வேண்டும் என்ற வகையில் இந்த ஆய்வு கூட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…