Sun ,Dec 10, 2023

சென்செக்ஸ் 69,825.60
303.91sensex(0.44%)
நிஃப்டி20,969.40
68.25sensex(0.33%)
USD
81.57
Exclusive

கதவை மூடினா கொரோனா வராதா.. இது என்ன புது லாஜிக்கா இருக்கு?

Sekar June 10, 2022 & 16:30 [IST]
கதவை மூடினா கொரோனா வராதா.. இது என்ன புது லாஜிக்கா இருக்கு?Representative Image.

வடகொரியாவின் எல்லையில் அமைந்துள்ள ஒரு சீன நகரம், அதன் குடிமக்களுக்கு கொரோனா வைரஸைச் சுமந்து செல்லும் துகள்கள் காற்றின் மூலம் பரவக்கூடும் என்ற அச்சத்தில், ஜன்னல்களை மூடுமாறு அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா பரவத் தொடங்கியது முதல் தங்கள் நாட்டில் ஒருத்தருக்கு கூட பாதிப்பு ஏற்படவில்லை என இரண்டு ஆண்டுகளாக வடகொரியா மருத்துவந்த நிலையில், தற்போது அங்கு கொரோனா வேகமாக பரவி வருவதாக அந்நாடு அறிவித்துள்ளது. 

இந்நிலையில் வடகொரியாவை ஒட்டியுள்ள சீன எல்லை நகரமான டான்டாங்கிலும் கொரோனா பரவுவது அதிகரித்துள்ளதுது. அங்கு பரவலான ஊரடங்கு கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், ஒவ்வொரு நாளும் அதிகமான மக்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.

எனினும் இதற்கான காரணத்தை உள்ளூர் அதிகாரிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் காற்றின் மூலம் வடகொரியாவிலிருந்து பரவலாம் என நினைத்து, இரு நாடுகளையும் பிரிக்கும் யாலு ஆற்றங்கரையில் வசிக்கும் குடியிருப்பாளர்களை தங்கள் ஜன்னல்களை மூடி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளனர்.

எனினும் அதிகாரிகளின் இந்த உத்தரவு சுகாதார நிபுணர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளன. ஹாங்காங் பல்கலைக்கழகத்தின் பொது சுகாதார நிபுணரான லியோ பூன், "கொரோனா துகள்கள் இவ்வளவு தூரம் பயணிக்கும் என்று நான் கேள்விப்பட்டதே இல்லை. இந்த ஆறு நூற்றுக்கணக்கான மீட்டர் அகலம் கொண்டது." என்றார்.

இவரது கருத்தையே பல மருத்தவ நிபுணர்களும் கூறியுள்ள நிலையில், இந்த உத்தரவு மக்களால் வேடிக்கையாக பார்க்கப்படுகிறது. எனினும் சீனாவில் அரசின் உத்தரவை மீறினால் என்ன நடக்கும் என்பது அனைவருக்கும் தெரியும் என்பதால், கதவை மூடி கொரோனாவை விரட்டி வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்