வரவிருக்கும் காலங்களில் சீனாவின் பிறப்பு விகிதத்தின் குறைவைச் சமாளிக்க நாட்டில் கட்டாய கர்ப்ப நடைமுறையை செயல்படுத்தி அதன் குடிமக்கள் முழுவதுமாக குழந்தைகளைப் பெறும்படி அந்நாடு கட்டாயப்படுத்துகிறது.
சீனா எதிர்மறையான மக்கள்தொகை வளர்ச்சியை எதிர்கொள்வதால், அரசாங்கம் அதன் குடிமக்களை முன்கூட்டியே திருமணம் செய்துகொண்டு தலா மூன்று குழந்தைகளையாவது பெற்றுக்கொள்ளும்படி கட்டாயப்படுத்தத் தொடங்கியுள்ளது. மேலும் அதிக குழந்தை பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்க, பல்வேறு போட்டிகளையும் நடத்த அரசு துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே, கொரோனாவால் நாட்டு மக்கள் வீடுகளில் இருக்க வேண்டிய கட்டாயம், உணவுப் பற்றாக்குறை, வருமானமின்மை, விலைவாசி உயர்வு, சுகாதாரப் பிரச்சினைகள் போன்றவற்றால் மக்கள் அதிருப்தியடைந்துள்ள நிலையில், அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள அவர்கள் மீது மேலும் அழுத்தத்தை அதிகரிப்பது மக்களிடையே கிளர்ச்சிக்கு கூட வழிவகுக்கலாம் என அந்நாட்டு பாதுகாப்பு நிபுணர்கள் அரசை எச்சரித்துள்ளனர்.
சீன தேசிய புள்ளியியல் அறிக்கை என்ன சொல்கிறது?
சீனாவின் தேசிய புள்ளியியல் பணியகத்தின் படி, 2013 மற்றும் 2019 க்கு இடைப்பட்ட ஆறு வருட காலப்பகுதியில் சீனாவில் திருமணங்களின் எண்ணிக்கையில் 41 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 7.6 மில்லியன் ஜோடிகளுக்கு மட்டுமே திருமணம் நடந்துள்ளது. இது கடந்த 36 ஆண்டுகளில் சீனாவில் பதிவான மிகக் குறைந்த எண்ணிக்கையாகும். இதன் விளைவாக, சீனாவின் பிறப்பு விகிதம் 1,000 பேருக்கு 7.5 குழந்தைகளாக குறைந்துள்ளது.
ஒன்பது மாகாணங்கள் மற்றும் பிரதேசங்கள் எதிர்மறையான மக்கள்தொகை வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக அறிக்கை மேலும் கூறுகிறது. இது சீனாவிற்கு பிரச்சனையாக மாறி வருகிறது. முன்பு சீனாவில் மக்கள் தொகையை கட்டுப்படுத்த ஒரு குழந்தை திட்டம் கட்டாயமாக அமல்படுத்தப்பட்டதே இப்போது சீனாவுக்கு சிக்கலாக மாறியுள்ளது.
இது எதிர்காலத்தில் கடும் மக்கள் தொகை வீழ்ச்சியை சீனாவுக்கு வழங்கும் எனக் கூறப்படும் நிலையில், ஏற்கனவே காலம் கடந்துவிட்ட நிலையில், சீனா மீண்டும் வலுக்கட்டாயமாக பெண்களை குழந்தை பெறும் மெஷின் போல் பயன்படுத்தி குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முயலும் என மனித உரிமை ஆர்வலர்கள் அஞ்சுகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…