Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

கல்யாண மாப்பிள்ளைக்கு மறக்க முடியாத கிஃப்ட் கொடுத்த முன்னாள் காதலிகள்..

Nandhinipriya Ganeshan Updated:
கல்யாண மாப்பிள்ளைக்கு மறக்க முடியாத கிஃப்ட் கொடுத்த முன்னாள் காதலிகள்.. Representative Image.

கல்யாண மண்டபத்திற்குள் மாப்பிள்ளை குஷியாக தாலி கட்டுவதற்கு காத்துக்கொண்டிருந்தபோது, மண்டபத்திற்கு வெளியே முன்னாள் காதலிகள் 7 பேர் திரண்டு போராட்டம் நடத்திய சம்பவம் சீனாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் யுனான் மாகாணத்தை சேர்ந்தவர் சென். இவர்ருக்கு கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோலாகலமாக நடைபெற்ற திருமணத்தின்போது திடீரென சென்னின் முன்னாள் காதலிகள் மொத்தமாக கல்யான மண்டபத்தின் முன்பாக திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

பின்னர், அவர்கள் கையில் பேனர் ஒன்றையும் வைத்திருந்தனர், அதில் 'பெண்களை ஏமாற்றாதீர்கள், அவர்களிடம் நேர்மையாக இருங்கள். எதிர்காலத்தில் அவர்கள் பழிவாங்க முடிவு செய்தால், உங்க நிலைமை என்னவாகும்' என்று கோஷங்களை எழுப்பினர். கல்யாணம் மண்டபம் கடைசியில போர்களம் மாதிரி ஆகிடுச்சு. உறவினர்கள் நண்பர்கள் எல்லோரும் அதிர்ச்சி அடைந்தனர். 

அதோடு சென்னின் வருங்கால மனைவியிடமும் தகராறு செய்திருக்கிறார்கள். இதனால், செய்வதறியாது திகைத்து நின்ற சென், முன்னாள் காதலிகளிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும், இதுபற்றி சென் கூறும் போது, "இது என்னை மிகவும் சங்கடப்படுத்தியது. இப்போது என் புது மனைவி என்னுடன் சண்டையிட்டுள்ளார், என்னிடம் முன்னாள் காதலிகள் இப்படி நடந்து கொண்டதற்காக நான் கோபப்படவில்லை. 

கடந்த காலத்தில் தான் ஒரு கெட்ட காதலனாக இருந்திருக்கிறேன் ஒப்புக் கொள்கிறேன். இளம் வயசுல, வயசுக்கோளாறுல இப்படி பக்குவம் இல்லாம நடந்துகிட்டேன். நான் பல பெண்கள் மனதை காயப்படுத்திவிட்டேன். என்னை மாதிரி யாரும் செய்யாமல் உங்கள் காதலிக்கு உண்மையாக இருங்கள்" என்று அட்வைஸ் செய்திருக்கிறார். ஆனால் இத்தனை காதலிகளை ஏன் ஏமாத்தினார் என்பது பற்றி அவர் வாய் திறக்கவில்லை. சீனாவில் திருமணம் நடக்க போகும் போது முன்னாள் காதலிகள் மொத்தமாக சென்று போராட்டம் செஞ்ச சம்பவம் பெரிய அளவில் இணையதளங்களில் பேசும் பொருளாக மாறியுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்