இந்திய-சீன எல்லை கட்டுப்பாட்டுக் கோடு நெடுகிலும் பதற்றத்திற்கு மத்தியில், கிழக்கு லடாக்கில் இந்தியா-சீனா எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள ராணுவ வீரர்களுடன் சீன அதிபர் ஜி ஜின்பிங் பேசியுள்ளார்.
வீரர்களுடன் வீடியோ கான்பெரன்ஸ் மூலம் நடந்த உரையாடலில், சீன அதிபர் ராணுவத்தின் போர் தயார்நிலையை ஆய்வு செய்தார் என்று அதிகாரப்பூர்வ சீன அரசு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
ஜின்ஜியாங் இராணுவக் கட்டளையின் கீழ் உள்ள குன்ஜெராப்பில் உள்ள எல்லைப் பாதுகாப்பு நிலைமை குறித்து சீன இராணுவத்தின் தலைமையகத்தில் இருந்து வீரர்களிடம் ஜின்பிங் உரையாற்றினார்.
ஆளும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும், சீன ராணுவத்தின் தலைமைத் தளபதியுமான ஜின்பிங், வீரர்களுக்குத் தனது கருத்துக்களில், சமீபத்திய ஆண்டுகளில், இந்தப் பகுதி எவ்வாறு தொடர்ந்து மாறி வருகிறது மற்றும் அது எப்படி ராணுவத்தை பாதித்துள்ளது குறிப்பிட்டார்.
இந்த உரையாடலின்போது, அவர், வீரர்களின் போர் தயார்நிலையை ஆய்வு செய்தார். இப்போது எல்லையில் டைனமிக் மற்றும் 24 மணி நேர கண்காணிப்பை மேற்கொண்டு வருவதாக ராணுவ வீரர்களில் ஒருவர் பதிலளித்தார்.
இதற்கிடையே, கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இந்திய மற்றும் சீன ராணுவ தரப்பில் 17 சுற்று உயர்மட்ட இராணுவப் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தாலும், மீதமுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் இல்லை.
சீனாவுடனான இருதரப்பு உறவின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு எல்லையில் அமைதியும் நிலைத்தன்மையும் அவசியம் என்று இந்தியா வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…