Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

சீனாவின் உளவு பலூன் எச்சரித்த அமெரிக்க பென்டகன் | spy balloon china

Priyanka Hochumin Updated:
சீனாவின் உளவு பலூன் எச்சரித்த அமெரிக்க பென்டகன் | spy balloon chinaRepresentative Image.

அமெரிக்கா மென்டோனா பகுதியில், ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் அந்நாட்டின் அணுசக்தி ஏவுதளத்தின் வான்பரப்பில் சந்தேகப்படும் படி பலூன் ஒன்று பறந்து சென்றுள்ளது. பிறகு சோதனை செய்து பார்க்கையில் அது சீனாவைச் சேர்ந்த உளவு பலூன் என்று தெரிய வந்துள்ளது. உடனடியாக அதனை அகற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஆனால் ஏவுகதளத்தின் மீது அந்த பலூனை சுட்டு வீழ்த்தினால் அது பெரிய ஆபத்துகளை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன. அது அமெரிக்க மக்களுக்கு பேராபத்தை ஏற்படுத்தும் என்பதால் நாங்கள் அந்த திட்டத்தை கை விட்டுவிட்டோம். தற்போதைக்கு அந்த பலூனின் இயக்கத்தை கண்காணித்து வருகிறோம் என்று கூறியுள்ளனர்.

இதனை தெரிந்துகொண்ட கனடா நாட்டின் தேசிய பாதுகாப்புத் துறை, அமெரிக்காவிற்கு கை கொடுக்கும் வகையில் அந்த பலூன் சார்ந்த விஷயங்களை கண்டறிய வேலைகள் செய்து வருகின்றனர். இந்த பிரச்சனைகள் நடைபெறுவதால் அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி அந்தோணி பிளிங்கன் இந்த வார இறுதியில் செல்ல இருந்த சீன பயணம் தள்ளி போடப்பட்டு உள்ளது. சீனாவின் இந்த செயல் அமெரிக்க சர்வதேச சட்ட விதிமீறல் என்று பிளிங்கன் கூறியுள்ளார்.  

அவர்களின் குற்றச்சாட்டிற்கு விளக்கம் அளித்த சீன வெளியுறவு விவகார அமைச்சகம், "அந்த பலூன் குடிமக்கள் பயன்பாட்டிற்காக சீனாவில் இருந்து வந்த ஆகாய கப்பல் வகையை சேர்ந்த விமானம். அது வானிலை ஆய்வு தொடர்புடைய ஆராய்ச்சிக்காக உருவாக்கப்பட்டது. அந்த பலூன் மேற்கத்திய காற்று பாதிப்பு மற்றும் சரியில்லாத ஆட்டோமேட்டிக் தன்மையாலும், திட்டமிட்ட இலக்கை விட்டு அது திசைமாறி தொலைவுக்கு சென்று விட்டது என தெரிவித்து உள்ளது. இருப்பினும் அது அமெரிக்க எல்லைக்குள் தவறுதலாக நுழைந்ததற்கு நாங்கள் எங்கள் வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறோம் என்றும் தெரிவித்துள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்