சீனாவில் கடந்த 1911-ல் மன்னராட்சி ஒழிக்கப்பட்டு, சீன தேசிய கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது. கடந்த 1927-ம் ஆண்டில் ஆளும் கட்சிக்கு எதிராக, சீன கம்யூனிஸ்ட் கட்சி போர்க்கொடி உயர்த்தியது. இதன் காரணமாக 1949-ம் ஆண்டு வரை சீனாவில் உள்நாட்டுப் போர் நீடித்தது. இந்த போரில் தோல்வியை தழுவிய சீன தேசிய கட்சியினர், தென் சீன கடலில் 168 தீவுகள் அடங்கிய தைவானில் குடியேறினர். அந்த பகுதியை சீனா தற்போது சொந்தம் கொண்டாடி வருகிறது.
கடந்த ஆண்டு ஆகஸ்டில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் அப்போதைய சபாநாயகர் நான்சி பெலோசி தைவானில் அரசு முறை பயணம் மேற்கொண்டார். அப்போது முதல் சீனாவுக்கும் தைவானுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. தைவானை சுற்றி வளைக்கும் வகையில் சீன போர்க்கப்பல்கள் நிறுத்தப்பட்டு உள்ளன. சீன போர் விமானங்கள் அடிக்கடி தைவான் வான் பரப்பில் அத்துமீறி நுழைந்து வருகின்றன. மேலும், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், சீனா தைவான் மீது படையெடுத்தால், தைவானை அமெரிக்கா பாதுகாக்கும் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், அமெரிக்க மற்றும் கனடா கடற்படைகள் தைவான் மற்றும் சீனாவை பிரிக்கும் ஜலசந்தியில் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தன. அப்போது சீனக் கப்பல் ஒன்று அமெரிக்க போர்க்கப்பலை நோக்கி சுமார் 137 மீட்டர் தொலைவில் பாதுகாப்பற்ற முறையில் நெருங்கியதாக அமெரிக்க ராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர். இதையடுத்து, சீனாவின் இராணுவம் அமெரிக்காவையும் கனடாவையும், வேண்டுமென்றே ஆபத்தைத் தூண்டுவதாக கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…