Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

காதலர் வாரத்தின் மூன்றாம் நாள் - சாக்லேட் டே | Chocolate Day 2023 Special

Priyanka Hochumin Updated:
காதலர் வாரத்தின் மூன்றாம் நாள் - சாக்லேட் டே | Chocolate Day 2023 SpecialRepresentative Image.

ஆண்டின் முக்கியமாக திகழும் பிப்ரவரி மாதம் என்றால் நமக்கு நினைவுக்கு வருவது "காதலர் தினம்" தான். அந்த மாதம் முழுவதும் தங்களுடைய வாழ்க்கைத் துணை, காதலி, நண்பர்கள் என்று அனைவரும் காதலை சந்தோசமாகக் கொண்டாட நினைப்பார்கள். காதலைப் பரிமாறிக்கொள்ளும் சிலவற்றை மையமாகக் கொண்டு பிப்ரவரி 7 முதல் பிப்ரவரி 14 ஆம் தேதி வரை காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் காதலர் தினத்தின் மூன்றாம் நாளாக பிப்ரவரி 9 அன்று "சாக்லேட் தினம்" விமர்சையாக கொண்டாட விரும்புவார்கள்.

காதலர் வாரத்தின் மூன்றாம் நாள் - சாக்லேட் டே | Chocolate Day 2023 SpecialRepresentative Image

சாக்லேட் டே

சாக்லேட் பிடிக்காதவர்கள் என்றும் யாரும் இருக்கவே முடியாது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எவ்ளோ வேண்டுமானாலும் சாக்லேட் சாப்பிட விரும்புவார்கள். அப்படி ஒரு பொருளை வைத்து தான் பிப்ரவரி 9 ஆம் தேதி சாக்லேட் தினம் கொண்டாடப்படுகிறது. என்ன காரணம் என்றால்? ஒருவருக்கு ஒருவர் பரிமாறும் அன்பு மற்றும் அரவணைப்பின் அடையாளமாக திகழ்வது சாக்லேட். முதன்மை காரணம் இது தான். தங்களுடைய வாழ்க்கை எப்போதும் மகிழ்ச்சியாக, இனிமையாக இருக்க வேண்டும் என்பதை மறைமுகமாக சொல்லும் வகையில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் தங்களுடைய காதலுடன் பல அற்புதமான நினைவுகளை மேற்கொள்ள தவிர்க்க வேண்டாம்.

காதலர் வாரத்தின் மூன்றாம் நாள் - சாக்லேட் டே | Chocolate Day 2023 SpecialRepresentative Image

சாக்லேட் நன்மைகள்

நமக்கு பிடித்த சாக்லேட்டில் இருக்கும் பொதுவான நன்மைகள் என்ன தெரியுமா?

உடலில் இருக்கும் கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும்.

இருதய பிரச்சனைகள் ஏற்படும் அதிகபட்ச அபாயத்தை தடுக்கும்.

நினைவக இழப்பை குறைத்து, நினைவாக ஆற்றலை அதிகரிக்கும்.

நம்மை சுறுசுறுப்பாக இருக்க ஊக்குவிக்கும் மற்றும் மனநிலையை சீராக வைத்திருக்க உதவும்.

இவற்றை தவிர்த்து நிறைய நன்மைகள் இருக்கிறது இந்த சாக்லேட்டில். இருப்பினும் அதிகம் எடுத்துக்கொள்ளாமல் எல்லாவற்றையும் அளவாக வைத்துக்கொள்ளுங்கள்.

காதலர் வாரத்தின் மூன்றாம் நாள் - சாக்லேட் டே | Chocolate Day 2023 SpecialRepresentative Image

சாக்லேட் பரிசு

சாக்லேட் தினத்தை கொண்டாட தம்பதிகள் சாக்லேட், ரோஜா பூ, கிஃப்ட் மற்றும் ஸ்வீட்ஸ் என்று பலவற்றை வாங்கி தந்து மகிழ்கின்றனர். இருப்பினும் இந்த தினத்தை மேலும் சிறப்பாக மாற்ற நம்முடைய காதலருக்கு நாமே சாக்லேட் தயாரித்து தந்தால் காதல் இன்னும் அதிகரிக்கும். எனவே, பலர் சாக்லேட் எப்படி செய்வது என்று தெரிந்துக்கொள்ள பேக்கிங் மற்றும் சாக்லேட் தயாரிக்கும் வகுப்புகளில் சேர்ந்து கற்றுக்கொள்கின்றனர்.

காதலர் வாரத்தின் மூன்றாம் நாள் - சாக்லேட் டே | Chocolate Day 2023 SpecialRepresentative Image

உலக சாக்லேட் தினம்

இதுவே உலக சாக்லேட் தினமானது ஜூலை 7 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஐரோப்பாவில் 1550 ஆம் ஆண்டு முதன் முதலில் சாக்லேட் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே, அப்போது முதல் உலகம் முழுவதும் அந்நாளில் குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள், நேசிப்பவர்கள் என்று அனைவருக்கும் சாக்லேட் தந்து கொண்டாடப்படுகிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்