Thu ,Sep 21, 2023

சென்செக்ஸ் 66,230.24
-570.60sensex(-0.85%)
நிஃப்டி19,742.35
-159.05sensex(-0.80%)
USD
81.57
Exclusive

தூத்துக்குடி அருகே காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

Baskarans Updated:
தூத்துக்குடி அருகே காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் Representative Image.

தூத்துக்குடி அருகே காலி குடங்களுடன் குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து அ கைலாசபுரம் பகுதி மக்கள் அந்தப் பகுதி வழியாக வந்த பேருந்தை சிறை பிடித்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், கோரம்பள்ளம் அருகே உள்ள  அ. கைலாசபுரம் கிராமத்தில் நூற்றுக்கணக்கான குடியிருக்குகள் உள்ளன. இந்த கிராமத்தில்  பஞ்சாயத்தில் இருந்து வெறும் மூன்று பைப்புகள் மட்டுமே உள்ளது. இதற்கு முன், தாமிரபரணி ஆற்றில் இருந்து  இந்த கிராமம் வழியாக சிப்காட் தொழிற்பேட்டைக்கு செல்லக்கூடிய டேங்க்கில் இருந்து தண்ணீர் தேவையை மக்கள் பூர்த்தி செய்துள்ளனர்.

ஆனால், கடந்த இரு வாரங்களுக்கு முன்னர், இந்த டேங்கில் இருந்து  வரும் தண்ணீரை நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மிகவும் சிரமமடைந்த இந்த கிராம மக்கள் தண்ணீர் பிடிப்பதற்காக இரண்டு கிலோமீட்டர் தூரம் சென்று பிடிக்க வேண்டியுள்ளது. அதுவும் உப்பு தண்ணீர் தான் பிடிக்க வேண்டி உள்ளதாக கூறும் மக்கள், இதுகுறித்து, ஊராட்சி மன்ற தலைவரை அணுகி குடிநீர் தேவை குறித்து முறையிட்டுள்ளனர்.

மேலும், குடிநீர் வினியோகம் செய்யப்படாமல் உள்ளதால் இப்பகுதி பெண்கள் குடிநீருக்காக ஆங்காங்கே தேடி அலையும் சூழ்நிலையை எடுத்து கூறியும் அவர் கண்டு கொள்ளவில்லை. மேலும், கால்நடைகளான, ஆடு, மாடுகளுக்கு கூட தண்ணீர் இல்லாமல் மிகவும்  தட்டுப்பாடாக உள்ளது. இப்பகுதி மக்கள் அனைவரும் கூலி வேலைக்கு சென்று வருவதால் அவர்கள் 15 ரூபாய் கொடுத்து தண்ணீர் வாங்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.

இதைதொடர்ந்து கிராம மக்கள் கிராம சாலையில் காலி குடங்களுடன் அரசு  பேருந்தை சிறைபிடித்தனர். பின்னர், சாலையில் அமர்ந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மறியல் செய்தனர். பின்னர் சிப்காட் ஆய்வாளர் சண்முகம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பின் கலைந்து சென்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்