Wed ,Nov 29, 2023

சென்செக்ஸ் 66,901.91
727.71sensex(1.10%)
நிஃப்டி20,096.60
206.90sensex(1.04%)
USD
81.57
Exclusive

2026-ல் தமிழக முதல்வரே..! மதுரையை கலக்கும் விஜய் மக்கள் இயக்கத்தின் போஸ்டர்..!!

Saraswathi Updated:
2026-ல் தமிழக முதல்வரே..! மதுரையை கலக்கும் விஜய் மக்கள் இயக்கத்தின் போஸ்டர்..!!Representative Image.

தமிழகத்தில் 2026ம் ஆண்டில் முதலமைச்சராக நடிகர் விஜய்யை வரவேற்கும் வகையில், விஜய் மக்கள் இயக்கத்தினர் ஒட்டியுள்ள போஸ்டர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் விஜய் அரசியலில் நுழைவதற்கான அடித்தளத்தை அமைத்துவருகிறார்.  அதன் ஒரு பகுதியாக கடந்த சில நாட்களுக்கு முன்பு மாநிலம் முழுவதும் உள்ள 234 தொகுதியிலும் 10,12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை நேரில் அழைத்து சந்தித்து, அவர்களை கவுரவப்படுத்தி பணப்பரிசுகளை வழங்கினார் நடிகர் விஜய்.  

விஜயின் இந்த நடவடிக்கை  விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை உற்சாகப்படுத்தியுள்ளது. இதையடுத்து, விஜய் அரசியல் பிரவேசத்தை உறுதி செய்யும் வகையில், மதுரை நகரில் விஜய் மக்கள் இயக்கத்தினர் விதவிதமான போஸ்டர்களை ஒட்டி பரபரப்பை கிளப்பியுள்ளனர்.  

2026-ல் தமிழக முதல்வரே..! மதுரையை கலக்கும் விஜய் மக்கள் இயக்கத்தின் போஸ்டர்..!!Representative Image

2026ல் தமிழக முதல்வரே...

வருகின்ற ஜூன்.22 தேதி நடிகர் விஜய் தனது 49வது பிறந்த நாளை கொண்டாடவிருக்கிறார்.  இந்நிலையில், மதுரை தெற்கு மாவட்ட தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்க ரசிகர்கள் " 2026  தமிழக முதல்வரே! எங்கள் தலைமுறையை தலைநிமிர்த்திய தலைவரே", நீங்கள் வாழ்க பல்லாண்டு எனவும், தமிழ்நாட்டு தலைமை செயலக கட்டடத்தின் முன் நடிகர் விஜய் நடந்து வருவதுபோலவும் "நாளை தமிழகத்தின் 20, காத்திருக்கிறது அண்ணா 26", எனவும் போஸ்டர் அடித்து மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் ஒட்டியுள்ளனர். விஜய் மக்கள் இயக்கத்தினரின் இந்த போஸ்டர்கள் தற்போது விஜய் ரசிகர்கள் மற்றும் அரசியல் கட்சியினரின் கவனத்தை ஈர்த்துவருகிறது.  
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்