Sun ,Apr 02, 2023

சென்செக்ஸ் 57,794.75
181.03sensex(0.31%)
நிஃப்டி17,012.25
60.55sensex(0.36%)
USD
81.57
Exclusive

முதல்வரின் அதிரடி அறிவிப்பு...மழைக் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய...முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் பட்டியல்!

Priyanka Hochumin November 01, 2022 & 14:25 [IST]
முதல்வரின் அதிரடி அறிவிப்பு...மழைக் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய...முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் பட்டியல்! Representative Image.

பருவமழைக் காலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். இதோ அவர் கூறிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.

ஒவ்வொரு மாநகராட்சிப் பகுதியிலும் 24 மணிநேரமும் செயல்படும் வகையில் அமைக்கப்படும் அவசர உதவி மையங்கள் முறையாக செயல்படுவதை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.

மழைக்காலத்தில் பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளை சார்ந்த அலுவலர்களும், வருவாய்த்துறை, பொதுப்பணித் துறை, தீயணைப்புத் துறை, வேளாண் துறை ஆகிய பல்வேறு துறை அலுவலர்களும் தனித்து இயங்காமல் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

நிவாரண மையங்களில் பொதுமக்களைத் தங்க வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் போது, அவர்களுக்குத் தரமான உணவு, குடிநீர், மின்சாரம், மருத்துவம் மற்றும் சுகாதார வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

முதல்வரின் அதிரடி அறிவிப்பு...மழைக் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய...முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் பட்டியல்! Representative Image

அரசுத் துறையுடன் சேர்ந்து மக்களும் ஒருங்கிணைந்து செயல்படும் சூழலை உருவாக்கிக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு நிவாரண முகாமிற்கும் ஒவ்வொரு பொறுப்பு அலுவலர் நியமிக்கப்பட வேண்டும்.

சென்னையில் மழை அதிகரித்து வருவதால் உதவிக்கான எண்களை அரசு அறிவித்துள்ளது.

044 2561 9206

044 2561 9207

044 2561 9208

கட்டணமில்லா உதவி எண்: 1913 

இந்த பொதுத் தொலைபேசி எண்களை மக்களிடம் பரப்ப வேண்டும். மேலும் நம்ம சென்னை செயலி அல்லது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கம் வழியாகவும் பொது மக்கள் தொடர்பு கொள்ளலாம்.

முதல்வரின் அதிரடி அறிவிப்பு...மழைக் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய...முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் பட்டியல்! Representative Image

பாதிப்புக்குள்ளாகும் பகுதியில் உள்ள மக்களை வெளியேற்றும்போது முதியோர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும், கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். பழுதடைந்த பலவீனமான சுற்றுச் சுவர்களை அப்புறப்படுத்த வேண்டும்.

வயல்வெளிகளில் பயிர் சேதம் ஏற்படாத வகையில் மழைநீர் வடிவதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். மாநகர மற்றும் நகராட்சிப் பகுதிகளில் மழைநீர்வடிகால்கள் மற்றும் அது தொடர்புடைய பணிகள் முறையாக மேற்கொள்ளப்பட்டு வருகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும்.

பொதுமக்களுக்கு தடையில்லா குடிநீர், பால் விநியோகம் மற்றும் மின்சாரம் வழங்கல், சமுதாய உணவுக்கூடம், நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் முன்னதாகவே அளிக்கப்படுவதை உறுதி வேண்டும்.

நோய்கள் பரவாமல் தடுக்க வேண்டும். பேரிடர் மேலாண்மையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். விபத்துகள் ஏற்படாமல் தடுக்க வேண்டும். மொத்தத்தில் மக்களைக் காக்க வேண்டும். அது ஒன்றே நமது இலக்கு ஆகும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்