Sun ,Dec 10, 2023

சென்செக்ஸ் 69,825.60
303.91sensex(0.44%)
நிஃப்டி20,969.40
68.25sensex(0.33%)
USD
81.57
Exclusive

தெர்மாகோல் உதவியுடன் நீச்சல் கற்றுக்கொண்ட இளைஞர் உயிரிழப்பு.!

madhankumar June 02, 2022 & 19:26 [IST]
தெர்மாகோல் உதவியுடன் நீச்சல் கற்றுக்கொண்ட இளைஞர் உயிரிழப்பு.!Representative Image.

சென்னை சிக்கராயபுரத்தில் உள்ள கல்குவாரியில் குளிக்க சென்ற கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முகப்பேர் கிழக்கு பகுதியை சேர்ந்த தினேஷ் தேவா, வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இவர் தனது நண்பர்களுடன் சிக்கராயபுரத்தில் உள்ள கல்குவாரியில் குளிக்க சென்றார். நீச்சல் தெரியாததால் இளைஞர் தெர்மாகோல் உதவியுடன் குளித்து கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக இளைஞர் தண்ணீரில் மூழ்கினார், பின்னர் உடனடியாக அந்த இளைஞரின் நண்பர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பூந்தமல்லி தீயணைப்பு வீரர்கள், நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு இளைஞரை சடலமாக மீட்டனர். தொடர்ந்து மாங்காடு போலீசார் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்