காங்கிரஸ் தலைவர் பதவி தேர்தலில் வேட்பு மனுத் தாக்கல் இன்றோடு முடியும் நிலையில், கடைசி நேரத்தில் பல அதிரி புதிரி சம்பவங்கள் நடப்பதால் டெல்லி காங்கிரஸ் வட்டாரம் பரபரப்பாக உள்ளது.
சசி தரூர் தலைவர் பதவிக்கு போட்டியிடுவது உறுதியாகிவிட்ட நிலையில், அசோக் கெலாட் ராஜஸ்தான் அரசியல் குழப்பத்தால் போட்டியிடுவதில் இருந்து பின்வாங்கினார். இதையடுத்து திடீரென திக்விஜய சிங் களத்தில் குதிக்க பரபரப்பானது.
ஆனால் இன்று திக் தான் போட்டியிடவில்லை என்றும், மல்லிகார்ஜுன கார்கே தலைவர் பதவிக்கு போட்டியிடும் சூழலில் அவருக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் கூறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தற்போது கார்கே மற்றும் தரூர் இருவரும் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
இதற்கிடையே திடீர் திருப்பமாக, ஜார்க்கண்ட காங்கிரஸ் தலைவர் கே.என்.திரிபாதியும் தலைவர் பதவிக்கு வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார்.
இது ஒருபுறம் இருக்க காங்கிரசின் புரட்சிக் குழு என வர்ணிக்கப்படும் மூத்த தலைவர்களைக் கொண்ட ஜி23 குழு, போட்டியை விடுத்து, ஒருமித்த கருத்தின் அடிப்படையில் தலைவர் தேர்வு செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளதாகத் தெரிகிறது.
வேட்பு மனுத் தாக்கல் இன்றோடு முடியும் நிலையில், பல்வேறு திருப்பங்களால் டெல்லி காங்கிரஸ் வட்டாரம் பரபரப்பில் உள்ளது. மற்றொருபுறம் இந்த அதிரிபுதிரி எதிலும் தலையிடாமல் ராகுல் காந்தி தனது பாரத் ஜோடோ யாத்திரையை பாஜக ஆட்சி நடக்கும் கர்நாடகாவுக்குள் கொண்டு சென்றுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…