Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

Corona Prevention Cost: சென்னையில மட்டும் இவ்வளவு தொகையா? அப்போ மற்ற மாவட்டத்தில் எல்லாம்…

Gowthami Subramani April 10, 2022 & 17:00 [IST]
Corona Prevention Cost: சென்னையில மட்டும் இவ்வளவு தொகையா? அப்போ மற்ற மாவட்டத்தில் எல்லாம்…Representative Image.

Corona Prevention Cost: சென்னை மாநகராட்சி கடந்த ஆண்டில் மட்டும் ரூ.310 கோடி செலவு செய்துள்ளது.

உலகம் முழுவதும் இன்று வரை நீங்காத நம்முடன் எப்போதும் இருந்து உயிர்களைப் பறிக்கும் கொடிய நோயான கொரோனா பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அண்மையில் சற்று கொரோனாவின் தாக்கம் குறைவாக இருக்கின்ற போதிலும், சீனாவில் இதன் வேகம் இன்னும் அதிகரித்து காணப்படுகிறது.

இத்தகைய கொடிய நோயிலிருந்து மக்களைக் காப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் தாக்கம் இன்றளவும் இருந்து கொண்டிருக்கும் போது, எந்த அளவிற்கு இதனைக் கட்டுப்படுத்தலாம் என்றும் தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு தான் வருகிறது.

இதையடுத்து, சென்னை மாநகராட்சி நேற்று மேயர் பிரியா அவர்களின் முன்னிலையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில், வெளிவந்த அறிக்கையின் படி, கொரோனா தடுப்பு பணிகளுக்கு மட்டும் ரூ. 310 கோடி செலவு செய்துள்ளது. இந்த கொரோனா பரவல் நிலையில், மருத்துவமனையில் படுக்கைகள் கூட இல்லாமல் போனது. அதனைத் தொடர்ந்து, இந்த குறையை நீக்குவதற்கு கோவிட் கேர் மையங்கள் என பல்வேறு சிகிச்சை மையங்களை உருவாக்கியுள்ளது தமிழக அரசு. இதனால், சென்னை மாநகராட்சி பகுதியில் மட்டும் கொரோனா தடுப்பு பணிகளுக்காக ரூ. 300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் பகுதி விவரங்கள் கீழே வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

கொரோனா தடுப்பு பணி

நிவாரணத்திற்கான செலவு

தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் உணவு

ரூ. 41.53 கோடி

மருந்து மற்றும் முகக்கவசம்

ரூ. 72.57 கோடி

கொரோனா சிகிச்சை கருவிகள்

ரூ. 1.78 கோடி

10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொற்று மருத்துவர்கள், சுகாதாரப்பணியாளர்கள், செவிலியர்கள், கொரோனா கால கட்டத்தில் வீடு வீடாகச் சென்று பரிசோதனை செய்தவர்கள்

ரூ. 116.72 கோடி

மின் அமைப்புகள் அமைப்பு

ரூ. 5.51 கோடி

வாடகைக்கணக்காக

ரூ. 45.59 கோடி

பிற செலவுகள்

ரூ.26.79 கோடி

 

இதன் படி, மொத்தம் ரூ. 310. 49 கோடி கொரோனா தடுப்பு பணிகளுக்கு மட்டும் செலவு செய்த தொகையாகும் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளையும் உடனுக்குடன் பெற வாட்ஸ்அப் பக்கத்தில் இணைந்திடுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்